Ads 468x60px

aaaaa



Back to top

Monday, December 16, 2013

Html Table...

வணக்கம் நண்பர்களே இன்று மற்றொரு பதிவுடன் இணைகின்றேன் நான் உங்களுடன்.HTML இல் Table ஒன்றை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
இங்கு Tableஉருவாக்க <table> </table> என்ற Tag பயன்படுகின்றது.எப்பவும் ஒரு  Table இல் Row,Column என்பன அடங்கியிருக்கும். நாம் Html இல் Row வை மட்டுமே உருவாக்குவோம்.அதற்கு  <tr> Table Row என்ற  Tag பயன்படுகின்றது. ஒவ்வொரு Row விலும் எத்தனை Cell வர வேண்டும் என அடுத்த படியாக உருவாக்குவோம். அதற்கு  <td> Table Data என்ற  Tag பயன்படுகின்றது.

<table>
<tr>
<td>Name</td>
<td>Address</td>
</tr>

<tr>
<td>sadun</td>
<td>battilcaloa</td>
</tr>

</table>

உதாரணத்திற்காக இப்படி நான் ஒரு Coding எழுதியுள்ளேன் அதன் விடை எவ்வாறு அமையும் எனப் பார்க்கலாம்
நீங்கள் வியப்பாய் பார்ப்பது விளங்குகின்றது என்னடா இது Table என்றா Row, Column எல்லாம் வேணும் இங்கு ஒன்றையும் காணலையே.....   இதுதானே அதற்கும் நீங்கள் இன்னுமொரு வேலை செய்ய வேண்டும் அது என்னவென்றால்.
<table border="1">
<tr>
<td>Name</td>
<td>Address</td>
</tr>

<tr>
<td>sadun</td>
<td>battilcaloa</td>
</tr>

</table>

பழைய Coding இல் நான் ஒரு மாற்றம் மட்டுமே செய்தேன் அதுதான் <table border="1">   இப்பொழுது பாருங்கள் மாற்றத்தின் பலனை.
இங்கு நாங்கள் கொடுக்கும் Border அளவிற்கேற்ப அதன் Border இன் அளவும் மாறிக் கொண்டே போகும் தேவை இல்லை என்றால் Border ஐ பற்றி கதைக்க வேண்டிய அவசியமே இல்லை.


அதே போல் நாம் Cell  ற்கு Border ஒன்று கொடுக்க  இப்படி coding ஐ பயன்படுத்துவோம'. <th> </th> Table Heading  என்று பொருள்படும்.

<table border="1">
<tr>
<th>Header 1</th>
<th>Header 2</th>
</tr>
<tr>
<td>row 1, cell 1</td>
<td>row 1, cell 2</td>
</tr>
<tr>
<td>row 2, cell 1</td>
<td>row 2, cell 2</td>
</tr>
</table>

Output
Header 1Header 2
row 1, cell 1row 1, cell 2
row 2, cell 1row 2, cell 2

நாம் Table ற்குள்  Text, Links, Images, Lists, Forms, Other Tables போன்றவற்றை பயன்படுத்தலாம்

நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

MS Excel 2010 நாட்களுக்கிடையிலான வித்தியாசத்தை பார்ப்பது எப்படி .

வணக்கம் நண்பர்களே மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதியும் பதிவு இது. சரி இன்று MS Excel 2010  இல் இரண்டு குறிப்பிட்ட மாதங்கள் அல்லது நாட்களுக்கிடையிலான வித்தியாசத்தை பார்ப்பது எப்படி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.முதலில் இதற்கு என்று ஒரு கணக்கை உருவாக்கி பார்ப்போம் வெறும் உதாரணத்திற்காக மட்டுமே இது இதைப் பயன்படுத்தி நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

Tuesday, November 19, 2013

MS Excel 2010 REPT Formula

வணக்கம் நண்பர்களே இன்று  MS Excel 2010 இன் ஒரு பதிவுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. சரி கதைக்கு வருவோம் அருமையான பல Function கள் MS Excel 2010 உள்ளது ஆனாலும் நமக்கு சிலவற்றைத்தான் தெரிந்து உள்ளது ஆனாலும் சிலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்குத்தான் இந்த பதிவுகள் இடம் பெறுகின்றது என்பதை அறியத்தருகின்றேன்.இன்று நாம் பார்க்க இருப்பது REPT Formula  பற்றி ஆகும்.

நாம் சிலவேளைகளில் யோசித்திருப்போம் எமக்கு தேவையான எண்ணிக்கைக்கு சமமான அளவு எமக்கு பிடித்த எழுத்துக்களை அல்லது வேறு Special Character களை எப்படி போடவைப்பது என்று. அதற்குத்தான் இன்று இந்த REPT Formula  வை நான் பயன்படுத்த போகின்றேன்.

முதலில் MS Excel 2010 இற்குச் சென்று இவ்வாறு Table  உருவாக்கிக் கொள்க.





நான் உதாரணத்திற்கு இப்படி 5 பெயர்களையும் அதற்கான எண்ணிக்கைகளையும்  கொடுத்துள்ளேன். எனக்கு வரைபில் வரவேண்டிய எழுத்து " @"ஆகும்.

=rept("@",B2)
நமக்கு வரவேண்டிய எழுத்தை '' '' குறிக்குள் கொடுத்துள்ளேன்.இல்லாவிடின் பிழையாகிவிடும்.




பாருங்கள் நீங்கள் கொடுத்த எண்ணிக்கைக்கு அளவான எண்ணிக்கையில் எழுத்து வந்துள்ளதை அவதானியுங்கள்.

 இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இந்த len formulla வைப் பயன்படுத்தி எண்ணிக்கையை பார்க்கவும். சரியாக இருக்கின்றதா.சரியாத்தான் இருக்கும்.
=Len(C2)





நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

Sunday, November 17, 2013

Google translator ஐ Music போடவைக்க வேண்டுமா

வணக்கம் நண்பர்களே இன்று Google Translator பற்றி ஒரு நகைச்சுவையான தகவலைப் பார்ப்போம் அதாவது நீங்கள் Google translator. சென்று கீழே உள்ளவற்றை அப்படியே Copy-Paste பண்ணிவிடுங்கள்.


pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk






 பின்பு அங்கே German  மொழியினைத் தெரிவு செய்யுங்கள். அதற்குப் பின் கீழே உள்ள Beatbox ( Speaker) Images தெரிவு செய்க அங்கே நடக்கும் ஆச்சரியம் பாருங்கடா Google translator Music போடுது. 


இது சும்மா

 நன்றி வேறு ஒரு பதிவுடன் தொடருவோம்

Friday, November 15, 2013

இலகுவாக Open செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது

வணக்கம் நண்பர்களே மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடருகின்றேன். Microsoft ஆனது உலகத்தில் பல பாகங்களிலும் பாவனையிலுள்ள ஒரு Operating System ஆகும். ஒவ்வொருவருடைய பாவனை முறைகளும் தேவைகளும் இடத்திற்கிடம் மாறும். மிகப் பெரிய வேலைகளை மிகச் சுலபமாக நடாத்தி முடிக்க பல Software  கொண்டுள்ளது இது. அவ்வளவு பெரிய மென்பொருட்களை இயக்க நாம் பல முறைகளைக் கையாள்வோம் அதில் ஒன்றுதான் Run Command ல் Shortcut  மூலம் நமக்குதேவையான மென்பொருளை Open செய்வது. இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் எப்படி நாம் ஒரு மென்பொருளுக்கு Windows Run Command  இல் இலகுவாக Open  செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது என்பது பற்றி ஆகும்.முதலில் நாம் தெரிந்திருக்க வேண்டியது என்ன வென்றால் நாம் கொடுக்கும் பெயர் ஏற்கனவே பாவனையில் இருக்ககூடாது.

Sunday, November 3, 2013

Google Fun...............!!

வணக்கம் நண்பர்களே இன்று  நான் கூகிள் பற்றி Magic செய்து காட்டப் போகின்றேன் வேறு ஒன்றுமில்லை சின்ன வேலை தான் ஆனால் நல்ல சுவாரசியமாக இருக்கும். 
1.முதலில் Google  க்கு சென்று  zerg rush  என செய்யுங்கள்  பாருங்கள் அதிசயத்தை எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு வருகின்றது.

 






2.முதலில் Google  க்கு சென்று  "Google terminal-"  என செய்யுங்கள் பாருங்கள் அதிசயத்தை 



இது சும்மா ............................!!!
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

Saturday, November 2, 2013

எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது அதுவும் உங்களுக்கு பிடித்த Password உடன்

வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருப்பது என்னவென்றால்  எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது  அதுவும் உங்களுக்கு  பிடித்த Password உடன். என்னது பாதுகாப்பா நம்பமுடியல்லையே ம்ம்ம்ம்.........பொறுங்கள் பொறுங்கள் எல்லாம் சொல்லுகின்றேன்.அதற்கு முன் நான் உங்களை ஒரு Software Developer ஆக மாற்றுகின்றேன். நான் சொல்வதை எழுதி முடித்தால் நீங்களும் உங்களுக்கு பிடித்த பெயரில் ஒரு மென்பொருளை உருவாக்கி இருப்பீர்கள். வாருங்கள்  Software Developer வாருங்கள்.

Thursday, October 31, 2013

MS Excel இல் எப்படி Photo எடுப்பது .............

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் MS Excel  இல் எப்படி Photo எடுப்பது என்று. என்னது Photoவா Excel லா நம்ப முடியல்லயே . நம்பணும் நம்பித்தான் ஆகனும் இது உங்கள் கடமை பீலாவுடறத நிப்பாட்டு சரி விசயத்திற்கு வா என்று சொல்வது விளங்குது சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா.சரி விசயத்திற்கு வருவோம் நாம் பொதுவாகExcel இல் உள்ளதை ஒரு Image File  ஆக மாற்றுவதற்கு  வேறு வேறு நடவடிக்கைகள் எடுப்போம்அதை விட நான் சொல்ல இருப்பது மிக இலகுவான முறை பற்றி ஆகும். இனி நடவடிக்கைக்குள் இறங்குவோம்.


Tuesday, October 29, 2013

MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு........!!

வணக்கம் நண்பர்களே இன்று MS Word 2010  சம்மந்தமான ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன்.இது ஒரு அருமையான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும் நாங்கள் சில காலங்களுக்கு முன்பு MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு பல இன்னல்களை எதிர் நோக்கியிருந்தோம் இப்பொழுது இதற்கு அழகான ஒரு நிவர்த்தியைக் கொடுத்துள்ளது Microsoft அது பற்றித்தான் இன்று பார்ப்போம்.சரி இதை மேற்கொள்வதற்கு நாம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு  Quick Access toolbar பற்றி தெரிந்திருக்கும் அதிலேதான் எமது மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றோம்.

Monday, October 28, 2013

MS Excel INFO function ................!!

வணக்கம் நண்பர்களே இன்று MS Excel  பற்றிய பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன். நாம் பல Function களை Excel  லில் பார்த்திருப்போம் நான் சொல்ல வரும் Function  அப்படிப்பட்டதுதான் பலருக்கு அனேகமாக தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கும்  அவர்களுக்காகத்ததான் இதைப்பதிகின்றேன்.இந்தப் Function னினுடைய பெயர்  INFO function  ஆகும். மிகவும் பிரதானமான என்று சொல்ல முடியாவிட்டாலும் சில தேவைகளுக்காக இதைப்பயன்படுத்தலாம். அதாவது நமது Excel பற்றிய தகவல்களைப் பார்வையிடவே இது பயன்படுகின்றது. ஆகவேதான் முக்கியமானது என்று இதை நான் கருதவில்லை சிலருக்கு தங்கள் தேவைகளைப் பொறுத்து முக்கியமானதாகப்படலாம்.

Sunday, October 27, 2013

வேகமாக Copy பண்ணும் ஒரு Software WinMend File Copy

வணக்கம் நண்பர்களே இன்று வேகமாக Copy பண்ணும் ஒரு Software பற்றி பார்க்க இருக்கின்றோம். வழமையாக மிகப்பெரிய File களை Copy பண்ணுவதற்கு அதிகளவான நேரம் எடுக்கும்.சில சமயம் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம் அதற்குத்தீர்வாகத்தான் நான் இந்த மென்பொருள் பற்றி உங்களுக்கு அறியத்தருகின்றேன்.சரி இனி மென்பொருள் பற்றிப்பார்ப்போம். இது மிகவும் இலகுவான Interface (இடைமுகப்பைக் ) கொண்டது ஆனால் மிகவும் அதிவேகமான தரவு மாற்றத்தை செய்யக்கூடியது. அதன் பெயர் WinMend File Copy  என்பது ஆகும். இது சாதாரணமாக கணணி Copy செய்யும் வீதத்தைவிட 300 மடங்கு வேகமாக Copy  செய்வதாக நிறுவனத்தினர் சொல்கின்றனர்.(www.winmend.com).

Saturday, October 26, 2013

Most 13 Samsung Smartphone Secret codes

வணக்கம் நண்பர்களே இன்று நான் Samsung Smart Phone ற்குரிய Code  ஐ பற்றி சில தகவல்களைப்பரிமாறலாம் என நினைக்கின்றேன்.ஏன் முதலில் Samsung பற்றி தருகின்றேன் என்றால் நான் பாவிப்பது Samsung Phone தானே அதுதான் மக்காள்ஸ்ஸ்ஸ்ஸ்.........சரி இனி Code ஐ பற்றி பார்ப்போம்.

Saturday, October 19, 2013

Exe file கள் எல்லாம் Notepad file ஆக Open பண்ணுப்பட்டால்...............!!

வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருக்கும் பதிவு என்ன என்றால் அதாவது நேற்று இரவு தற்செயலாக நான் என்னை மறந்து ஒரு .Exe file ஐ Notepad  மூலம் open with  இல் திறக்க முற்பட்டேன் அதன் விளைவு அது எல்லா  exe file களையும் Notepad file இற்|கு மாற்றிவிட்டது. எதை Open பண்ணினாலும் அவை  Notepad லேயே திறந்தன என்ன செய்வது என்று புரியாமல்Restore  பண்ணி பார்த்தேன்  ம்ம்ம்ம்ம............!! தோல்வி மட்டுமே நிச்சயமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் இல்லை இல்லை பல நிமிடங்கள் திகைத்துப்போயிருந்தேன்.

நீங்கள் காலையில் எழுந்தவுடன் என்ன செய்வீர்கள் .....!!

வணக்கம் நண்பர்களே, இன்று ஒரு ஆய்வு சம்மந்தமான பதிவுடன் இணைகின்றேன். அதாவது நீங்கள் காலையில் எழுந்தவுடன் வழமையாக என்ன செய்வீர்கள்? உதாரணத்திற்காக சொல்கின்றேன் காலைக்கடன்களை முடித்து விட்டு Tea/ Coffee அருந்தி விட்டு மற்ற வேலைகளைத் தொடங்கிவிடுவீர்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தின் நவீன வளர்ச்சியின் பயனாக அது எல்லாம் மாற்றம் கண்டு விட்டது என்றே நீங்கள் சொல்லலாம்.

Wednesday, October 16, 2013

Photoshop "aqua" Text Effect -01








வணக்கம் நண்பர்களே இன்று Photoshop இன் ஒரு Text Effect  ஒன்றை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.முதலாவது Photoshop இல் புதிய File ஒன்றை உருவாக்குக.(File>New அதன் அளவுகள் இவ்வாறு அமையும். 1920x1200px/72 dpi



பிறகு Paint Bucket Tool (G) ஐ தெரிவு செய்து   அதில் #17CBFF இந்த  Color ஐ தெரிவு செய்க.இப்பொழுது கீழே உள்ள களர் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.அதை Layer  இல் பிரயோகிக்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3


அதன் பிறகு  Brush Tool (B) தெரிவு செய்து அதில்  Opacity  என்பதை 30%  மாற்றிவிட்டு  இந்த  Color ஐ தெரிவு செய்து கொள்க #0499E6 . அத்துடன் Master Diameter, Hardness என்பனவற்றை கீழே உள்ளவாறு மாற்றிவிடுங்கள்.



பிறகு Brush ஆல் எமது File  இன் இரண்டு பக்கங்களையும் Brush  பண்ணிவிடுக.பின்பு இப்படி காட்சியளிக்கும்.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3























பிறகு கீழ் பக்கத்தையும்  Brush  பண்ணிவிடுக.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
பிறகு Horizontal Type Tool (T) ஐ தெரிவு செய்க.பின் உதாரணத்திற்காக ‘aqua’  என type  செய்க .எல்லாவற்றையும் தனித்தனி எழுத்தாக Type செய்து வைக்கவும். அதில்  "Q" வை மட்டும் கொஞ்சம் பெரிதாக Type செய்க.அப்பொழுது Type Tool இன் Properties இல் கிழே உள்ள மாற்றங்களை அப்படியே செய்க. 0497E5 என்ற  color தெரிவு செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
" Q" விற்கு மட்டும் இப்படி மாற்றம் செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
இப்பொழுது எமது File ஆனது கீழே உள்ளவாறு காட்சியளிக்கும்.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3பிறகு Type ஐ தெரிவு செய்து விட்டு  Ctrl+J  கீயை Press பண்ணுக. அப்பொழுது புது Layer ஆனது Copy பண்ணப்பட்டிருக்கும்.அதற்கு பின்  #084DA2 color ஐ தெரிவு செய்து பின் Move Tool (V) பயன்படுத்தி கீழே Move  பண்ணி விடுக.அது கீழே உள்ளவாறு காட்சியளிக்கும்.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3பிறகு எல்லா Layer களையும் தனித்தனியே தெரிவு செய்து இவற்றை Double Click  பண்ணி Blending Options தெரிவு செய்க.அதில்  Outer Glow என்பதை தெரிவு செய்க.பின் அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
உங்களுடைய File  இப்படி காட்சியளிக்கும்.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
பிறகு Blending Options – Inner Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
பிறகு Blending Options – Outer Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
பிறகு Blending Options – Inner Shadow தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
பிறகு Blending Options – Gradient Overlay தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
Gradient Editor தெரிவு செய்க.அதில் கீழே உள்ளவாறு மாற்றங்களை தெரிவு செய்க.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
பாருங்கள் மாற்றங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
இப்படி எல்லா எழுத்துக்களுக்கும் இப்படியே மாற்றம் செய்து கொள்ளுக.
Create the famous Aqua wallpaper in just a few minutes using Adobe Photoshop CS3
கடைசியில் இப்படி காட்சியளிக்கும். நீங்களும் இப்படி சில மாற்றங்களை செய்து அழகாக மாற்றிக் கொள்ளுங்கள். நான் செய்த சில உதாரணங்களை பாருங்கள்.



நன்றி மீண்டும் வேறு ஒரு பதிவுடன் தொடருவோம்.


Monday, October 14, 2013

CSS3 Border Styles

வணக்கம் நண்பர்களே இன்று CSS3 சம்பந்தமான ஒரு பதிவுடன் உங்களை அணுகின்றேன்.இது பற்றி உங்களுக்கு அதிகமான அளவு தெரிந்திருக்கும். உண்மையிலே இது  Web Developer க்குத்தான் அதிகபட்சமாக உதவும்.இது Webpage  ன் Layout மற்றும் Style போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவும்.இப்பொழுது இதன் பிந்தைய பதிப்பான CSS3 வந்துள்ளது. இதில் CSS2 இல் செய்ய முடியாத சில வேலைகளைஅழகாகவும் இலகுவாகவும் செய்து முடிக்கலாம்.அப்படி ஒரு பயன்பாட்டைத்தான் இன்று பார்ப்போம்.

Wednesday, October 9, 2013

எச்.ரி.எம்.எல்(HTML)அல்லது மீசுட்டு மொழி 3

இன்றும் HTML இன் ஒரு பதிவுடன் தொடருகின்றேன். நாம் பொதுவாக எழுத்துக்களுக்கு சில(Formatting) அழகுகளைக் கொடுக்கலாம். இதன் மூலம் முக்கியமானவற்றை வேறுபடுத்தியும் காட்டலாம். உதாரணமாக MS Word  பயன்படுத்தும் போது தெரிந்திருந்திருக்கும் சில சொற்களை தடிப்பாகவும் சிலவற்றை சரித்தும் எழுதுவோம்.இப்படி HTML லும் பல Tagகள் உள்ளன அவற்றைத்தான் இன்று பார்ப்போம்.இவற்றை Html Formatting Tag என்று அழைப்பர்.

Tuesday, October 8, 2013

எச்.ரி.எம்.எல்(HTML)அல்லது மீசுட்டு மொழி 2

எச்.ரி.எம்.எல்(HTML)அல்லது மீசுட்டு மொழி 1என்ற பதிவில் ஏற்கனவே HTML பற்றிய ஒரு தொடக்கத்தை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு இடம் பெறுகின்றது.இன்று  HTML பற்றிய அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளோம். எப்படிHTML Coding எழுதி Run பண்ணுவது என்று பார்ப்போம்.இது பெரிய விடயமே இல்லை சாதாரண ஒரு சின்ன விடயம்தான்.


Friday, October 4, 2013

Google Chrome Bookmarks Backup

வணக்கம் வணக்கம்,

இன்று Google Chrome பற்றிய ஒரு பதிவை இடுகின்றேன். அதாவது நாங்கள் Net Browsing  பண்ணும் போது முக்கியமான Site களின் முகவரிகளை ஞாபகத்திற்காக பதிந்து வைப்போம்(Bookmarks என்று  சொல்வார்கள்).



Thursday, October 3, 2013

Android என்பதனுடைய பெயர்கள் (Names and Images)

Android என்றாங்களே அதன் வரலாறு தெரியுமா உங்களுக்கு, சரி வாங்க பார்ப்போம். இந்த Android என்பதனுடைய பெயர்கள் எல்லாமே சாப்பாடுகளின் பெயரை அடிப்படையாகக் கொண்டதுதான். அதாவது உலகில் புகழ் பெற்ற சாப்பாடுகளின் பெயர்களைத்தான் அதற்கு பெயரிட்டுள்ளனர். யாரோ நம்ம பயபுள்ளதான் பெயர் வச்சிருப்பானோ.

Saturday, September 28, 2013

Eagleget Download Software

வணக்கம் நண்பர்களே இன்று ஒரு மிக அழகான Software உடன் உங்களைச் சந்திக்க வருகின்றேன். உண்மையில் அது அழகான Software தான் இருந்தாலும் அதன் செயற்பாடு மிகவும் அழகானது.நீங்கள் ஏதாவது வீடியோ,சொப்ட்வெயார் இப்படி ஏதாவது Download பண்ணவேணும் என்றால் நாம் பயன்படுத்துவது IDM தான்.ஆனாலும் இதை இலவசமாக நம்மால் பெற முடியாது ஆனாலும் அப்படி இப்படி  Crack,Patch பண்ணி பாவிக்கலாம்.

இன்று உங்களுக்கு அறிமுகமாகும் Software பெயர் என்னவென்றால் EagleGet ஆகும்.இது வெறும் 4.1 Mb மட்டும்தான்.விண்டோசின் XP,Vista, 7,8  எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம்.

Thursday, September 26, 2013

எச்.ரி.எம்.எல்(HTML)அல்லது மீசுட்டு மொழி 1

என்னுடைய தோழர்களின் தேவைப்பாட்டிற்கு இணங்க இந்தHTML பற்றிய பதிவு நடைபெறுகின்றது. இது அங்கம் அங்கமாக என்னுடைய வலைப்பூவில் வந்து கொண்டே இருக்கும். கேள்விகள் இருந்தால் எனது Email முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

எச்.டி.எம்.எல் (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை (Web page) வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழி ஆகும். முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி இதுவே ஆகும். இன்றும் இதுவே அனேக வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைக்கிறது. HTML Documents    .html அல்லது .htm கோப்பு நீட்சி கொண்ட கோப்புக்களாக அமையும்.

New i OS Rank


Wednesday, September 25, 2013

Google Android Device Manager

வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவில் இருந்தபடி உங்கள் Android Smart Phone ஐ கட்டுப்படுத்துவது (Remote device lock ) எப்படி என்பது ஆகும். மிகவும் அருமையான சேவை Google இன் அற்புதமான படைப்புகளில் ஒன்று ஏற்கனவே Apple Phone களில் இச்செயற்பாடு உள்ளது என எங்கேயோ வாசித்த ஞாபகம் எனக்கு. ஆனாலும் எமது  Android ற்கு வந்தால் ஒரு தனி சுகம்தானே.யாரும் எதிர்பார்க்காத வகையில் சில  Important Option இதில் உள்ளது.

Tuesday, September 24, 2013

G.T.A 5 முதல் நாள் வருமானமாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியிருக்கின்றது

கணணி  விளையாட்டுக்கள் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த வகையில் எத்தனை புது புது விளையாட்டுக்கள் வெளிவந்துள்ளன , வெளிவந்தும் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் விளையாடும் ஒரு விளையாட்டு என்றால் அது  GTA (Grand Theft Auto) ஆகும்.

HTML/CSS பயன்படுத்தும் Color Names

HTML/CSS இல் நாம் பயன்படுத்தும் Color களைப் பற்றி பார்ப்போம். இதில் 17  Color கள் மாத்திரம் எல்லா  Browser களுக்கும்  Support பண்ணக்கூடியதாக இருக்கின்றது. அவையாவன  aqua, black, blue, fuchsia, gray, green, lime, maroon, navy, olive, orange, purple, red, silver, teal, white, and yellow அதை தவிர இன்னும் 123 Color களையும் தற்பொழு உள்ள எல்லா Browser களும்  Support பண்ண கூடியதாக இருக்கின்றது.





















அடுத்தது






















அடுத்தது





















எல்லாக் Color ஐயும் பாவித்துப் பாருங்கள். உங்கள் Web Page இன் அழகை விரும்பியவாறு அமையுங்கள்.

நன்றி

Sunday, September 22, 2013

எப்படி உங்களது Fan Page ஐ Like பண்ணுவது

சிலர் என்னிடம் கேட்டிருந்தனர் எப்படி உங்களது Fan Page  ஐ Like பண்ணுவது என்று. அதற்காகத்தான் இந்த பதிவு.

முதலில் Face book சென்று உங்கள் Account  ஐ Open செய்து கொள்ளுங்கள்.
பிறகு







வட்டம் போட்டுக் காட்டியதில் Search for people place and things  என்றிருக்கும். அதில் Blogger Tamil Computer என்று செய்து தட்டினால் ஒரு Page  கிடைக்கும்.

அதில் வட்டம் போட்டுக் காட்டியதில் Like என்றிருக்கும் அதைக் கிளிக் செய்தால் அந்தப் Page Like பண்ணுப்படும்.பண்ணிய பின் Liked என்று மாறி ஒரு 'சரி' அடையாளம் இடப்பட்டிருக்கும்.
இவ்வளவுதானா என்று கேட்பது புரிகிறது. இனி என்ன Like பண்ணி விடுங்க Please.

நன்றி




HTML 5 அறிமுகம்

வணக்கம் நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு எனக்கு E-Mail மூலமாக வந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவை எழுகின்றேன். அதாவது HTML 5 ப் பற்றி எழுத வேண்டியிருந்தீர்கள் .இதோ உங்களுக்கு அதைப்பற்றி விவரங்களை தருகின்றேன்.இனி இதைப் பற்றி மேலதிக தகவல்கள் அடுத்த அடுத்த பதிவுகளில் வெளிவரும்.

HTML 5 என்பது புதிய மொழி அல்ல அது ஏற்கனவே வெளிவந்த HTML இன் புதிய பதிப்பு அல்லது நிலை எனலாம்.1999 ஆம் அண்டு முதல் HTML/ HTML 4.1 என்பன வெளியாகின அன்றிலிருந்து இணையத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். இப்பொழுது HTML 5 ஆனது பல Browser களை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம். மிக விரைவில் வந்திருந்தாலும் எல்லா Browser களும் இதற்கு (Support) ஆதரவாக வேலை செய்கின்றது.

Offline And Online அகராதி

வணக்கம் நண்பர்களே பல நாட்களின் தேடலின் பின் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.நானும் சொந்தமாக பதிவுகள் எழுதுவதில்லை அது எப்படி முடியும் எல்லாம் எங்கிருந்தோ  சுட்டதுதானே ஆனாலும் அதை நியாயயப்படுத்த விரும்பவில்லை ஏனென்றால் நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை ஆஹா இப்படியும் ஒன்றா சரி விடுங்கப்பா இப்பத்தான் சொந்தமா எழுதத் தொடங்கி இருக்கன்..பல வேளைகளில் சில  ஆங்கில சொற்களுக்கு எனக்கு சரியான தமிழ் அர்த்தம் விளங்கவில்லை என்ன செய்யலாம் ஒரு டிக்சனரி(அகராதி) பாவித்தேன் புரட்டினேன் அது ரொம்க குஸ்டம் அப்பா சொரி சொரி கஸ்டம் அப்பா. நாமதான்  IT Peopleலே பிறகு என்ன Online  இல் சில முகவரிகளில் தேடித்தேடி  எடுத்தேன் அதுவும் திருப்தி இல்லை.எப்பவும் நமக்கு ஒன்றிலும் திருப்தி இல்லைதானே தேடல்தான் முக்கியம் இன்னும் என் நண்பனுடன் (Google) தேடினேன் அப்போது அழகான ஒரு முகவரி கிடைத்தது.

Friday, September 20, 2013

Google Chrome பிழைச்செய்தியை நீக்க

சிலர் என்னிடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க நான் இப்பதிவை எழுதுகின்றேன். அதாவது சிலர் தங்கள் Browser  ஐ திறந்து  Facebook ற்கு செல்வதற்காக முகவரியை தட்டிவிட்டால் ஒரு Window Open ஆகி Different Alert  வந்திருக்கும் எப்படி முயற்சிசெய்தாலும் உள்ளே செல்ல முடிவதில்லை இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தனர்.


Thursday, September 19, 2013

உங்கள் Computer இல் இருந்த படியே உங்கள் Phone கண்காணிக்க


நான் சில மாதங்களுக்கு முன் பட்ட கஷ்டம் பற்றியதுதான் இந்தப் பதிவு. அது எப்படி ஆரம்பிப்பது சரி வந்தாச்சு ஆரம்பிச்சுதான் பார்ப்போமே .நான்  Samsung Galaxy Y என்ற Hand phone  பாவிக்கின்றேன் முதலில் USB Cable  இணைத்து எனது Memory Stick இல் உள்ள தகவல்களைப் பார்ப்பேன். அது பெரிய விசயமில்லை. ஆனாலும் எனக்கு ஒரு ஆசை அதாவது Nokia PC suite  போல் ஏதாவது என் போனுக்கு இருக்குமா என்று தேடினேன் தேடினேன் என் நண்பன் Google  இல் தேடினேன் அவன் பல முகவரிகளைத்தந்தான் ஆனால் எனக்கு பெரிதாக ஒன்றும் திருப்தி இல்லை. அதில் KITE என்ற ஒரு Software பாவித்தேன் அது ரொம்ப  Lateஆக எல்லாம் Slow ஆனது. எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஆசை என்னை விடவில்லை ஆனாலும் தேடுதல் ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

Tuesday, September 17, 2013

I Phone 5s


1.ப்ராசசர்: 

ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.


2. விரல் ரேகை: 

டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. 

பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.


3. பேட்டரி

தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.


4. கேமரா: 

இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. 

தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.


5. இயக்கும் சிப்: 

இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.


6. இலவச அப்ளிகேஷன்கள்: 

இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன. 


7. வடிவமைப்பு: 

இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.


8. திரை: 

மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 


9. சிம்: 

இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.


10. மொழிகள்: 

இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன. 

thanks therinjikko blog

பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

பேஸ்புக்(Facebook)  தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ ( Shortcut Key)தொகுப்புகள்

நாம்  Facebook பயன்படுத்துகையில் சில வேளை அவசரத்திற்கு Keyboard  வேலை செய்யாமல் போனால் அல்லது நீங்கள் நினைக்கலாம் Facebook இற்கு வேறு  Software இருப்பது போல் Shortcut Key இருக்குமா என்று ? ஆம் இருக்கின்றது அதைத்தான் நான் உங்களுக்கு பகிர போகின்றேன்.

Alt+1 – ஹோம் பேஜ் கிடைக்க (Home Page)
Alt+2 –உங்களுடைய புரபைல் கிடைக்க(Profile) 
Alt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்(Message)
Alt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்) 
Alt+5 – அறிவிப்புகள் (Notifications)
Alt+6 – மை அக்கவுண்ட் (My Account)
Alt+7 – பிரைவசி செட் செய்வது (Privacy setting)
Alt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்(Fan page)
Alt+9 – Terms and Conditions தரும் பக்கம் 
Alt+0 – உதவி மையம் (Help)



Monday, September 16, 2013

MY Apps

MY Apps


இதோ எனது Blogger ஐ நான் ஒரு APPS ஆக மாற்றி விட்டேன் Smart Phone வைத்திருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.


OR     

                                         http://www.appsgeyser.com/597136  






















இதை Google Play  இல் Upload  செய்வதற்கு 25 டொலர் கேட்கிறார்கள் Upload  பண்ண உதவ யாராவது முன் வந்தால் அதை எனக்கு தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

QR Code

QR Code



QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address,ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:

  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
எனது Blogger ஆன QR Code Image உள்ளது அதை உபயோகிப்போம்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில்( Save to file) இது Text file ஆக   சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது..

அந்த text file copy பண்ணி Browser  இல் Paste பண்ணும் போது எனது Blogger திறந்து கொள்ளும்.
TO Download 
பிறகு என்ன .....நாங்களும் செய்வோம் என்று சொல்வது கேட்குது.......
நன்றி

Popular Posts

Most Special Post

Blogger Widgets