Ads 468x60px

aaaaa



Back to top

Thursday, September 19, 2013

உங்கள் Computer இல் இருந்த படியே உங்கள் Phone கண்காணிக்க


நான் சில மாதங்களுக்கு முன் பட்ட கஷ்டம் பற்றியதுதான் இந்தப் பதிவு. அது எப்படி ஆரம்பிப்பது சரி வந்தாச்சு ஆரம்பிச்சுதான் பார்ப்போமே .நான்  Samsung Galaxy Y என்ற Hand phone  பாவிக்கின்றேன் முதலில் USB Cable  இணைத்து எனது Memory Stick இல் உள்ள தகவல்களைப் பார்ப்பேன். அது பெரிய விசயமில்லை. ஆனாலும் எனக்கு ஒரு ஆசை அதாவது Nokia PC suite  போல் ஏதாவது என் போனுக்கு இருக்குமா என்று தேடினேன் தேடினேன் என் நண்பன் Google  இல் தேடினேன் அவன் பல முகவரிகளைத்தந்தான் ஆனால் எனக்கு பெரிதாக ஒன்றும் திருப்தி இல்லை. அதில் KITE என்ற ஒரு Software பாவித்தேன் அது ரொம்ப  Lateஆக எல்லாம் Slow ஆனது. எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஆசை என்னை விடவில்லை ஆனாலும் தேடுதல் ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு நாள் எதேச்சையாக  Gmail இல் Mail Check பண்ணிக் கொண்டிருக்கும் போது அருகில் ஒரு விளம்பரம் என் கண்களைக் கவர்நது விட்டது,வழமையாக Add எல்லாம் பார்ப்பதில்லை அன்று எதேச்சையாக பார்த்தேன் ரொம்ப சந்தோசம்.
அதில் இப்படி குறிப்பிட்டிருந்ததது.Download Free Pc Manager Software, Easy file transfer.



உடனே அந்த தளம் சென்று Download பண்ணி எனது கணணியில் நிறுவிப் பார்த்தேன்.உண்மையிலே பிரமாதம். நான் அதிர்ந்தே போய் விட்டேன்.அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது எனது தந்தை சொன்ன சொல் எதையும் மேலோட்டமாக பார்க்க கூடாது என்று.

சரி இனி Software பற்றி கொஞ்சம் பார்ப்போம்.உங்கள் கணணியில் நிறுவிய பின்

  •  முதலாவது உங்கள் USB Data Cable இணைக்க வேண்டும் அப்போது உங்கள்  Phone லும் சில Drivers Install பண்ணப்படும்.

  • இப்பொழுது பார்த்தீர்கள் என்றால் அந்த Software உங்கள் Phone  ஐ தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கும். அதாவது உங்கள் Phone Wallpaper ஐ கூட எடுத்திருக்கும். ஆச்சரியம் ஒன்றுமில்லை. எல்லாம் நல்ல Software Coding தான். இருந்தாலும் நமக்கு புதுசுதானே.



மேலே  காட்டியது எனது Phone பற்றிய எல்லாத் தகவல்களும் . அந்த பிள்ளையார் படம் எனது Wallpaper ஆகும். அது மட்டுமல்ல Phone Battery Chargeஅளவு, உங்கள் phone  இல் என்ன என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரிய வரும்.
  • அடுத்தது உங்கள்  Phone  SD Card   இல் என்ன  இருக்கின்றது . Phone Backup செய்யலாம் அதே போல் Phone Back up i restore செய்யலாம் அப்படியே வைத்து Phone  ற்கு Apps Install  செய்யலாம். 
  • அது மட்டும் அல்ல Phone ல் உள்ள Contact Number களை  பார்க்கலாம் Number சேர்க்கலாம் Number அழிக்கலாம்.அதே போல் வந்த SMS பார்க்கலாம் அத்துடன் SMS ம் அனுப்பலாம்.ஒவ்வொரு நம்பருக்குரிய  SMS ஐ தனித்தனியாக பார்க்கலாம். இல் உள்ள MP3 File கள் மூலம் பாடல் கேட்கலாம் அதே  போல் Videoகளையும் பார்க்கலாம் Image File களையும் பார்க்கலாம் என்ன  Apps Install  பண்ணப் பட்டு உள்ளது என்பதையும் மிகத்துல்லியமாக அறியலாம்.அதில் இருந்த படியே தேவையற்ற APPS ஐ Uninstall செய்து கொள்ளலாம்.
  • அடுத்ததாக Phone ல் உள்ள Internal storage, SD Card  இன் கொள்ளளவுகள் நிரம்பி இருப்பது  Free ஆக இருப்பது போன்றவற்றையும் பார்க்லாம்.அத்துடன்  SD Card இல் என்ன என்ன File கள் உள்ளது என்பதை வேறு வகையான நிறங்களிலும் காணக் கூடியதாக இருக்கும்.
Download Link
http://www.mobogenie.com/download.html
இப்ப சொல்லுங்கள் நான் சொன்னது எல்லாம் சரிதானே இதைப்பற்றி. இனி வேறென்ன அனுபவித்துப்பாருங்கள். நீங்களே மெய் மந்து போவீர்கள்.

நன்றி

1 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets