Ads 468x60px

aaaaa



Back to top

Tuesday, July 12, 2016


Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் 

Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்ப்டுள்ளது ஏனெனில் மக்கள் எல்லோரும் பொதுவான ஒரு முறையையே இதற்காக உபயோகிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. 
Google  ஆனது தனது Android Operating system- ற்காக Android Lock Patterns (ALPs)  2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது கடவுச்சொல்லிற்கு பதிலாகAndroid’s lock-screen pattern . அதாவதுAndroid’s lock-screen pattern system என்றால் பயனாளர் கடவுச் சொல்லை தட்டச்சு செய்வதற்குப் பதிலாக 9 புள்ளிகள் கொண்ட தொடு திரையில் வடிவத்தை வரைந்து பூட்டைத் திறப்பர். இது நினைவில் வைத்துக் கொள்வதற்கு மிகவும் இலகுவாக இருந்தமையால் இதற்கான வரவேற்பு மிகவும் பிரபலமாக இருந்தது.
Marte Løge எனும் பட்டதாரி ( Norwegian University of Science and Technology)  தனது master’s thesis  ற்காக இந்த ஆராய்ச்சியை செய்தார். அதற்காக  அவர் 4000 Pattern locks  தெரிவு செய்தார். ஆதன் மூலமே இந்த தெளிவான முடிவை அவர் கொண்டு வந்தார்.
கடந்த வாரம் Las Vegas இல் நடைபெற்ற PasswordsCon” ' மாநாட்டில் மிகத் தைரியமா இப்படிக் குறிப்பிட்டார் அவர்“Tell Me Who You Are, and I Will Tell You Your Lock Pattern”. குறைந்தது 4 முனைக்கீறல்களையும் கூடியது 9 முனைக்கீறல்களையும் கொண்டது இந்த முறைமை. நாம் கீறக்கூடிய Pattern களின் அதிக பட்ச எண்ணிக்கை 389112  ஆகும்.
LENGTH
NUMBER OF COMBINATIONS
4
1,624
5
7,152
6
26,016
7
72,912
8
140,704
9
140,704


இந்த அராய்ச்சியின் மூலம் இவரால் மிகவும் சுவாரசியமான பல தகவல்களை வெளிக்கொணர முடிந்தது.அவையாவன


  •  44 வீதமானவர்கள் இடது மேல் மூலையில் இருந்தே இந்த Pattern ஐ வரையத்தொடங்குகிறார்கள்.
  • மிகவும் பிரபலமானது 4 மூலைப் Pattern களே ஆகும். இவை சாதரணமாக 1624 தொடர்புகளைக் கொண்டது.
  • ஆத்துடன் அதிகமானPattern கள் இடமிருந்து வலமாகவே வரையப்படுகின்றது அத்துடன் மேலிருந்து கீழாக வரையப்படுகின்றன இவையும் கணிப்பதற்கு இலகுவானதா அமைகின்றது.
  • ஆத்துடன் இவர் மேலுமொரு முடிவுக்கும் வந்தார் அதாவது ஆண்களும் பெண்களும் Pattern களை உருவாக்கும் விதம் மாறுபடுகின்றதாம். இரண்டு பாலாருமம் 9 புள்ளி கோலங்களை வரைவது மிக மிக அரிதாகும். சிலவேளைகளில் மாத்திரமே 8 புள்ளிகள்வைத்து வரைகின்றார்களாம்.
  • Loge இன்னுமொன்றையும் வெளிக் கொணர்ந்தார் , இது பல்வேறு நபர்களிடம் இருந்ததாகவும் அவர் கூறினார் ஓவ்வொருவரும் தங்கள் பெயரின் முதல் எழுத்தையோ அல்லது தங்களுக்கு பிடித்தமானவர்களின் முதல் எமுத்தை தானாம் Pattern க வரையறை செய்கின்றார்களாம்.
 அவர் இறுதியாக தெரிவித்தது மேல் உள்ளவாறு ஏதேனும் முறைகளை நீங்கள் பாவித்தால் தயவு செய்து உங்கள் Pattern ஐ Off  பண்ணி விட்டு உங்கள் தொலைபேசியை எந்த வித பூட்டுக்களும் இடாமல் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே நண்பர்களே நீங்கள் இந்த ஆய்வுக் கட்டுரையை வாசித்து முடித்த போது நீங்கள் எந்த ரகம் என்று தெரிந்திருப்பீர்கள் அத்துடன் உங்கள் தரவுகளை இன்னொருவர் அடைவதை தடுக்க மிகச் சரியான முறைகளை தெரிவு செய்வீர்கள் என நினைக்கின்றேன்.
நன்றி
மீண்டும் வருகின்றேன் வேறு ஒரு பதிவுடன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets