என்னுடைய தோழர்களின் தேவைப்பாட்டிற்கு இணங்க இந்தHTML பற்றிய பதிவு நடைபெறுகின்றது. இது அங்கம் அங்கமாக என்னுடைய வலைப்பூவில் வந்து கொண்டே இருக்கும். கேள்விகள் இருந்தால் எனது Email முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
எச்.டி.எம்.எல் (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை (Web page) வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழி ஆகும். முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி இதுவே ஆகும். இன்றும் இதுவே அனேக வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைக்கிறது. HTML Documents .html அல்லது .htm கோப்பு நீட்சி கொண்ட கோப்புக்களாக அமையும்.
சரி இதன் ஆரம்ப கால வரலாறுகள் எமக்குத் தேவைதான்ஆனால் இங்கே தேவையில்லை நீங்கள் ஆறுதலாக தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.முக்கியமாக HTML Coding எழுதுவதற்கு பலவகையான மென் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றது ஆனாலும் செலவில்லாத எமது விண்டோவில் உள்ள Notepad / Word Pad போதுமானது.சரி இனிஎப்படி HTML Coding எழுதுவது எனப் பார்ப்போம்.
<html>
<head> <title></title> </head>
<body> </body>
</html>
இவ்வளவும் போதும் ஒரு Web page உருவாக்கி விடுவதற்கு.இங்கு ஒரு தொடக்கம் இருந்தால் கட்டாயம் அதை முடிக்கவும் வேண்டும்.
உதாரணத்திற்கு
<Html> இப்படி தொடங்கினால் </Html>இப்படி முடிக்கவும் வேண்டும்.இதுதான் முதலாவது கட்டாயப் பாடு (Rules)ஆகும். இப்படி சில (Rules) வரும் தேவையான போது அதைப் பார்ப்போம்.
HTML பல கூறுகளைக் கொண்டுள்ளது. உறுப்புகள், அவற்றின் பண்புகள் ஆகியவை (HTML) மீசுட்டு குறியீட்டின் அடிப்படை. பின்வருவது HTML பக்கங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. எல்லா பக்கங்களிலும் இருக்கும்.
<html> தொடக்க உறுப்பு,
<head> தலை தொடக்க உறுப்பு, இதற்குள்தான் <Title>உம் meta தகவலகள் இடப்படும்.
<title> </title> தலையங்கம் இங்குதான் Webpage இற்கான தலைப்பு இடப்படும்.
</head> தலை முடிவு,
<body> உடல் தொடக்க உறுப்பு,
</body> உள்ளடக்கம்,
</html> உடல் முடிவு ஆகியவை எல்லா எச்.டி.எம்.எல் பக்கங்களிலும் இருக்கும்.
Meta Data என்பதில் நமது கணணிக்கு கொடுக்கப்படும் Keywords ஆகும். அதாவது Google போன்ற தேடுபொறிகளில் சில் சொற்களைக் கொண்டுதான் தேடி முதலாவது இடத்திற்கு கொண்டு வருகின்றது.உதாரணமாக நீங்கள் உங்கள் Webpage வியாபாரம் சம்மந்தாக உருவாக்கியிருக்கிறீர்கள் என்றால் ( Laptop Sales ) அது பற்றி Keyword கொடுக்கப்படும்.
(E+G) Laptop sales, All type laptops, Brand new Laptops, Used Laptops ,etc........
Meta Data என்பதில் நமது கணணிக்கு கொடுக்கப்படும் Keywords ஆகும். அதாவது Google போன்ற தேடுபொறிகளில் சில் சொற்களைக் கொண்டுதான் தேடி முதலாவது இடத்திற்கு கொண்டு வருகின்றது.உதாரணமாக நீங்கள் உங்கள் Webpage வியாபாரம் சம்மந்தாக உருவாக்கியிருக்கிறீர்கள் என்றால் ( Laptop Sales ) அது பற்றி Keyword கொடுக்கப்படும்.
(E+G) Laptop sales, All type laptops, Brand new Laptops, Used Laptops ,etc........
இதுதான் HTML இன் ஆரம்பம் ஆகும். இனி அடுத்த பதிவுகளில் சில அடிப்படை விசயங்களைக் கற்போம்.
நன்றி தொடருவோம் அடுத்த பதிவுடன்.
0 comments:
Post a Comment