கணணி விளையாட்டுக்கள் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த வகையில் எத்தனை புது புது விளையாட்டுக்கள் வெளிவந்துள்ளன , வெளிவந்தும் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் விளையாடும் ஒரு விளையாட்டு என்றால் அது GTA (Grand Theft Auto) ஆகும்.
ஏற்கனவே பல பதிப்புக்கள் வெளியாகி உள்ளன ஆனாலும் தற்பொழுது இது இந்த மாதம் 17 ஆம் திகதி (Sep 17) GTA 5 வெளியாகி உள்ளது. உலகளவில் அதன் விற்பனை சக்கை போட்டுக் கொண்டிருப்பதாக அதன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் அதன் முதல் நாள் வருமானமாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியிருக்கின்றது.GTA 5 ஆனது இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது PlayStation 3 and Xbox 360. அதற்கேற்றாற் போல் அதன் விலைகளும் அமைந்துள்ளது மூன்று வகையாக வெளிவந்துள்ளது
Standard Edition is $59.99,
Special Edition is $79.99,
Collector's Edition costs $149.99 ஆகும்.
பலரும் இதனை ஒரு வன்முறை விளையாட்டு என்று சொல்லும் போது இல்லை அது ஒரு வாழ்க்கை கலை பின்பற்றிய விளையாட்டு என்று நிறுவனம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.அப்படி இருந்தும் கடந்த வாரம் பொலிசார் லண்டனில் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர் ஏனெனில் அவர்கள் திருட்டு Game DVD வாங்கிய இளைஞன் ஒருவனை தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதில் பயங்கரமான வன்முறைச்சம்பவங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் ஒருவரை மின்சாரம் கொடுத்து மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
அவை ஒரு புறம் இருக்கட்டும் நமக்குதான் என்ன Game Crack பண்ணி வரட்டும் நாமும் ஒரு கை பார்த்து விடலாம் என்று இருக்கிறீர்கள் என்ன.
நன்றி PC Mag
1 comments:
ரொம்ப கரக்டா சொன்னீங்க
Post a Comment