வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் அற்புதமான ஒரு செய்தியை நீங்கள் அவலுடன் எதிர்பார்த்திருந்த ஒரு செய்தியை நான் தரவிருக்கின்றேன். அதாவது தொலைவில் இருந்தபடி உங்கள் Android Smart Phone ஐ கட்டுப்படுத்துவது (Remote device lock ) எப்படி என்பது ஆகும். மிகவும் அருமையான சேவை Google இன் அற்புதமான படைப்புகளில் ஒன்று ஏற்கனவே Apple Phone களில் இச்செயற்பாடு உள்ளது என எங்கேயோ வாசித்த ஞாபகம் எனக்கு. ஆனாலும் எமது Android ற்கு வந்தால் ஒரு தனி சுகம்தானே.யாரும் எதிர்பார்க்காத வகையில் சில Important Option இதில் உள்ளது.
இதை Android Device Manager என அறிமுகம் செய்துள்ளனர்.இதற்கு என்று ஒரு இடைமுகப்பு உள்ளது. இதிலிருந்தவாறே உங்கள் Phone விரும்பியவாறு கையாளலாம். முக்கியமாக இதில் 3 Option உள்ளது.
முதலாவது நீங்கள் உங்கள் Phone ஐ எங்கேயோ மறந்து விட்டீர்கள் ஆனால் எப்படி இதை கண்டுபிடிப்பது என நீங்கள் தெரியாமல் திக்கு முக்காடி கொண்டிருக்கிறீர்கள் உங்கள் Phone ற்கு Call பண்ணுகிறீர்கள் ஆனால் அது Silent Mode இல் உள்ளது தேடு தேடு எனத்தேடி கடைசியில் எங்கிருந்தோ கண்டு பிடிப்பீர்கள்.அதற்குத்தான் வந்து விட்டது இதில் உள்ள முதலாது Option. உங்கள் Phone Silent Mode இல் இருந்தாலும் இதிலுள்ள Ring என்ற Option ஐ கிளிக் செய்தால் எங்கிருந்தாலும் உங்கள் Phone Ring பண்ணும்.
இரண்டாவது நீங்கள் உங்கள் Phone ஐ மறந்து எங்கேயோ விட்டு விட்டீர்கள் அதில் உங்கள் உயிர் போகும் அளவிற்கு முக்கியமான விடயங்கள் உள்ளது உங்களுக்கு பயம் பிடிக்கின்றது யாராவது அதைப் பார்த்து விடுவார்கள் என்று என்ன செய்யலாம் ஒன்றும் செய்ய முடியாது உங்களின் கதை முடிந்திடும். அதை தவிர்கத்தான் இந்த இரண்டாவது Option Lock உள்ளது.நீங்கள் தூரத்தில் இருந்த படியே உங்கள் Phone ஐ Lock செய்தால் யாரும் அசைக்க முடியாது.
நீங்கள் ரஜனியின் சிவாஜி படம் பார்த்திருப்பீர்கள் அதில் அவருடைய Laptop ஐ பொலிசார் எடுத்து On பண்ணும் போது ஒரு Voice Code கேட்கும் பிழையாக சொன்னதால் அதில் உள்ள எல்லா Data களும் அழிந்து விடும்.அதுதான் இங்கும் உள்ளது உங்கள் Phone தொலைந்து விட்டது என நீங்கள் நம்பினால் அது இனி உங்களுக்கு இனி 100% கிடைக்காது என்றால் நீங்கள் உங்கள் Phone இல் இருந்த எல்லாத் தகவல்களையும் அழித்து விடலாம்.
எப்படி இருக்கு கட்டாயம் இதைப்போல் ஒன்றைத்தான் நான் நெடுநாட்களாக தேடினேன் என்று சொல்வது எனக்கு கேட்கின்றது.இனி ஒவ்வொரு படிமுறைகளையும் பார்ப்போம்.
Step 1
உங்கள் Android Phone இல் Google Setting என்பதிலுள்ள Android Device Manager என்பதை கிளிக் செய்யவும்.அதில் உள்ள என்ற இரண்டு Option யும் Select பண்ணி விடவும்.
அப்படி தெரிவு செய்தால் மட்டும் தான் நீங்கள் உங்கள் கணணியில் இருந்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தலாம்.
Step 2
பின்பு இந்த https://www.google.com/android/devicemanager Address ற்குச் செல்லுங்கள். அப்போது உங்கள் Google Play இன் User name, Password ஐ கொடுத்து Login ஆக வேண்டும்.பின்பு இப்படி ஒரு Window உங்களுக்கு கிடைக்கும். அதில் உங்களது Phone இன் பெயர் எங்கிருந்து அதனுடைய Signal வருகின்றது என்பதையும் காணலாம்.நீங்கள் உங்கள் Phone தொலைத்திருந்தால் இப்பொழுது எங்கிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கலாம்.
1.இப்பொழுது Phone எங்கிருக்கின்றது என்பதைக் குறிக்கின்றது.
2.Phone ஐ Ring பண்ணச் செய்யலாம்.
3.Phone ஐ Lockபண்ணச் செய்யலாம்.
4.Phone இலுள்ள Data க்களை அழித்துவிடலாம்.
5.Phone ஆனது எத்தனை மணிக்கு ,எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருந்தது என்பதை அறியக் கூடியதாக உள்ளது.
6.Phone இன் பெயர் அல்லது Phone ற்கு வேறு பெயர் கொடுப்பதற்கு உதவும்.
நான் முற்று முழுதாக இதைப் பரிசோதித்து விட்டேன் எனக்கு 100% திருப்தி இனி இது உங்களுக்காக அனுபவியுங்கள் .
உங்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரம் கொண்டு சேர்ப்பேன்.
கடைசியாக ஒருAdvice இனி யாருக்கும் உங்கள்Google Play இன் User Name, Password ஐ கொடுத்து விடவேண்டாம்.
நன்றி
0 comments:
Post a Comment