வணக்கம் நண்பர்களே இன்று வேகமாக Copy பண்ணும் ஒரு Software பற்றி பார்க்க இருக்கின்றோம். வழமையாக மிகப்பெரிய File களை Copy பண்ணுவதற்கு அதிகளவான நேரம் எடுக்கும்.சில சமயம் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம் அதற்குத்தீர்வாகத்தான் நான் இந்த மென்பொருள் பற்றி உங்களுக்கு அறியத்தருகின்றேன்.சரி இனி மென்பொருள் பற்றிப்பார்ப்போம். இது மிகவும் இலகுவான Interface (இடைமுகப்பைக் ) கொண்டது ஆனால் மிகவும் அதிவேகமான தரவு மாற்றத்தை செய்யக்கூடியது. அதன் பெயர் WinMend File Copy என்பது ஆகும். இது சாதாரணமாக கணணி Copy செய்யும் வீதத்தைவிட 300 மடங்கு வேகமாக Copy செய்வதாக நிறுவனத்தினர் சொல்கின்றனர்.(www.winmend.com).
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி (Download) உங்கள் கணணியில் (Install) நிறுவிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இது வெறும் 2Mb அளவுதான் கொண்டது. பிறகு இந்த மென்பொருளை திறந்தால் கீழே காட்டியவாறு இருக்கும்.
1.Add File :- Copy செய்ய வேண்டிய File அல்லது Folder ஐ Add பண்ண வேண்டும்.
2. Destination path :- எங்கு Copy ஆக வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
3.இதில் குறிப்பிட்ட அளவுகளை தெரிவு செய்தால் ஒரு செக்கனுக்கு எத்தனை Mb Copy ஆக வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.1Mb, 2Mb, 10 Mb................32 Mb.
4. Copy :- இதைக் கிளிக் செய்தால் பண்ணும் வேலை தொடங்கி விடும்.
சில நல்ல மென்பொருள்களுக்கான ஒரு சேவையும் இதில் உள்ளது அதாவது சிலருக்கு சில நிறங்களை அதிக நேரம் பார்ப்பதற்கு இயலாமல் இருக்கும் அதற்காக மாற்று நிறங்களை பயன்படுத்த முடியும்.அதே வேலையைத்தான் இதிலும் அடக்கியுள்ளனர். எமக்கு விரும்பிய 5 நிறங்கள் உள்ளன தேவையான நிறத்தை தெரிவு செய்து பாவிக்கலாம்.
அடுத்ததாக Copy ஐ கொடுத்த பின் இப்படித்தான் காட்சியளிக்கும். அதில் பார்த்தீர்கள் என்றால் எந்த File ஐ Copy செய்கின்றோம் எவ்வளவு நேரம் எடுக்கின்றது எவ்வளவு Mb ஆல் Copy (30Mb/s) ஆகின்றது என்பதையும் காணலாம்.
பாவித்துப்பாருங்கள் வேகத்தை அனுபவியுங்கள்.
1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்
நன்றி நவீன மாற்றம்.
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
0 comments:
Post a Comment