Ads 468x60px

aaaaa



Back to top

Saturday, October 19, 2013

Exe file கள் எல்லாம் Notepad file ஆக Open பண்ணுப்பட்டால்...............!!

வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருக்கும் பதிவு என்ன என்றால் அதாவது நேற்று இரவு தற்செயலாக நான் என்னை மறந்து ஒரு .Exe file ஐ Notepad  மூலம் open with  இல் திறக்க முற்பட்டேன் அதன் விளைவு அது எல்லா  exe file களையும் Notepad file இற்|கு மாற்றிவிட்டது. எதை Open பண்ணினாலும் அவை  Notepad லேயே திறந்தன என்ன செய்வது என்று புரியாமல்Restore  பண்ணி பார்த்தேன்  ம்ம்ம்ம்ம............!! தோல்வி மட்டுமே நிச்சயமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் இல்லை இல்லை பல நிமிடங்கள் திகைத்துப்போயிருந்தேன்.


அவசர வேலை இருக்கின்றது PC யில் அத்துடன் PC ஐ  Format பண்ணுவது என்றால் என்னுடைய Data க்களும் அழிந்து விடும். என்ன செய்வது என்ன செய்வது மண்டைய பிச்சுகிட்டேன் பக்கத்தில இருந்த நண்பன்  என்னை பார்க்க முடியாம நாளை வாரன் என்று கிளம்பி விட்டான்.

அப்போது ஏதோ எண்ணம் வர நண்பன் Google இடம் சென்று முறையிடுவோம் என நினைத்து எந்த Browser  ஐ Open பண்ணினாலும் Notepad  தான் Open ஆகின்றது. பிறகு ஒரு மாதிரி Browser ஐ  எடுத்து அதில் அவனிடம் கேட்டேன்  அவன் சில விடயங்களை எனக்கு காட்டினான் அங்கே சொல்லப்பட்ட எல்லாவற்றையும் பொறுமையாக படித்தேன் அப்போதுதான் நான் உங்களுக்கு சொல்லப்போகும் வழி கிடைத்தது.ஆனந்தம் பேரானந்தம் அற்புதம்............................!!!!!!!!!


இதற்கு 3 வழிகள் உள்ளன
முதலாவது Microsoft இடம் Online இல் உதவி கேட்பது.................................ஆனால் அது எம்மால் முடியாத காரியம் ஏனென்றால் நம்மடதுதான் Original Win 7  இல்லையே அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.

இரண்டாவது  Ready-Made Registry Script அப்படியே வைத்து Registry  ஐ ஒழுங்காக்குவது.அதுவம் 100 %வேலை செய்கின்றது. கவலையே இல்லை.

மூன்றாவது நாம் சுயமாக Registry ஐ மாற்றம் செய்வது.பாருங்களேன் அதுவும் 100 % வேலை செய்கின்றது.அது எப்படி என்று பார்ப்போம்.

1. Run  Dialog box  ஐ திறந்து command  ஐ Open செய்க.
2.  இந்த Command ( cd\windows) ஐ Type செய்து  Enter தட்டுக





3.இந்த Command ( regeditஐ Type செய்து  Enter தட்டுக






4.அதில் HKEY_CLASSES_ROOT\.exe என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

******   Registry Edit  என்பது மிக முக்கியமானது எதற்கும் கவனமாக நான் சொல்வதை கையாளவும் இல்லாவிடின் எல்லாம் கைமீறிப் போய் விடும். ******


5.அதில் வலப்பக்கம் Default key  இப்படி  exefile  உள்ளதா எனப் பார்க்கவும்.இல்லாவிட்டால் மாற்றிக்கொள்ளவும்.

6. HKEY_CLASSES_ROOT\exefile\shell\open\command என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில்  Default key  "%1" %*   இப்படி உள்ளதா எனப் பார்க்கவும். இல்லாவிட்டால் மாற்றிக் கொள்ளவும்.




அம்புட்டுத்தேன் உங்களது PC ஐ Restart பண்ணிவிடவும். இப்பொழுது பாருங்கள் எல்லாம் சரியாக நடைபெறும்.

நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

3 comments:

vivekisravel said...

Thanks bro
usefull tips

visite my website and subscribe

nan unga websita la subscribe panniten

vivekisravel@gmail.com

vivekisravel said...

Bro unga website la subscribe panna mudiyala

help plz

Unknown said...

Bro nan vivekisravel

unga website la email subscribe panna mudiyala
help plz

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets