Ads 468x60px

aaaaa



Back to top

Tuesday, November 19, 2013

MS Excel 2010 REPT Formula

வணக்கம் நண்பர்களே இன்று  MS Excel 2010 இன் ஒரு பதிவுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. சரி கதைக்கு வருவோம் அருமையான பல Function கள் MS Excel 2010 உள்ளது ஆனாலும் நமக்கு சிலவற்றைத்தான் தெரிந்து உள்ளது ஆனாலும் சிலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்குத்தான் இந்த பதிவுகள் இடம் பெறுகின்றது என்பதை அறியத்தருகின்றேன்.இன்று நாம் பார்க்க இருப்பது REPT Formula  பற்றி ஆகும்.

நாம் சிலவேளைகளில் யோசித்திருப்போம் எமக்கு தேவையான எண்ணிக்கைக்கு சமமான அளவு எமக்கு பிடித்த எழுத்துக்களை அல்லது வேறு Special Character களை எப்படி போடவைப்பது என்று. அதற்குத்தான் இன்று இந்த REPT Formula  வை நான் பயன்படுத்த போகின்றேன்.

முதலில் MS Excel 2010 இற்குச் சென்று இவ்வாறு Table  உருவாக்கிக் கொள்க.





நான் உதாரணத்திற்கு இப்படி 5 பெயர்களையும் அதற்கான எண்ணிக்கைகளையும்  கொடுத்துள்ளேன். எனக்கு வரைபில் வரவேண்டிய எழுத்து " @"ஆகும்.

=rept("@",B2)
நமக்கு வரவேண்டிய எழுத்தை '' '' குறிக்குள் கொடுத்துள்ளேன்.இல்லாவிடின் பிழையாகிவிடும்.




பாருங்கள் நீங்கள் கொடுத்த எண்ணிக்கைக்கு அளவான எண்ணிக்கையில் எழுத்து வந்துள்ளதை அவதானியுங்கள்.

 இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இந்த len formulla வைப் பயன்படுத்தி எண்ணிக்கையை பார்க்கவும். சரியாக இருக்கின்றதா.சரியாத்தான் இருக்கும்.
=Len(C2)





நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets