Ads 468x60px

aaaaa



Back to top

Friday, November 15, 2013

இலகுவாக Open செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது

வணக்கம் நண்பர்களே மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடருகின்றேன். Microsoft ஆனது உலகத்தில் பல பாகங்களிலும் பாவனையிலுள்ள ஒரு Operating System ஆகும். ஒவ்வொருவருடைய பாவனை முறைகளும் தேவைகளும் இடத்திற்கிடம் மாறும். மிகப் பெரிய வேலைகளை மிகச் சுலபமாக நடாத்தி முடிக்க பல Software  கொண்டுள்ளது இது. அவ்வளவு பெரிய மென்பொருட்களை இயக்க நாம் பல முறைகளைக் கையாள்வோம் அதில் ஒன்றுதான் Run Command ல் Shortcut  மூலம் நமக்குதேவையான மென்பொருளை Open செய்வது. இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் எப்படி நாம் ஒரு மென்பொருளுக்கு Windows Run Command  இல் இலகுவாக Open  செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது என்பது பற்றி ஆகும்.முதலில் நாம் தெரிந்திருக்க வேண்டியது என்ன வென்றால் நாம் கொடுக்கும் பெயர் ஏற்கனவே பாவனையில் இருக்ககூடாது.
முக்கியமான குறிப்பு என்ன வென்றால் நான் KM Player ற்கு எப்படி Shortcut Create  பண்ணுவது எனக் காட்டுகின்றேன். ( நாங்க அதுதானே அதிகம் பயன்படுத்துவது)

1.உங்கள் Desktop இல் வைத்து Right Click செய்து New சென்று Shortcut    என்பதைக்கிளிக் செய்யுங்கள்.
                                                             (   Right click > New > Shortcut )

2.அப்பொழுது உங்களுக்கு இப்படியொரு Window வரும் இதில் தேவையான மென்பொருளின் Install செய்யப்பட்ட இருப்பிடத்தை தெரிவு செய்யவும்.


3. பின் Next என்பதை  தெரிவு செய்த  பின்னர் நாம் மென்பொருளுக்கு Short cut  ற்குரிய பெயரைக் கொடுப்போம்.நான் கொடுப்பது MYKMP  என்று.

4.இப்பொழுது  Desktop இல் அதே Software  இன்  Icon உடன் நாம் கொடுத்த பெயரில் உருவாக்கியிருக்கும்.

5.இப்பொழுது நாம் உருவாக்கிய Shortcut  ஐ Windows Root Folder ற்குள் Cut செய்து  Paste பண்ணிவிடுவோம்.
                      (  C:\Windows    இதுதான் Windows Root Folder ஆகும்) 
 இந்த நேரத்தில் Administrator இனுடைய சம்மதம் கேட்கும் அதைக் கொடுங்கள்.

இவ்வளவுதான் இப்பொழுது Run  ற்கு சென்று நீங்கள் கொடுத்த பெயரைக் கொடுங்கள் பாருங்க ஐயா பாருங்க அம்மணி வந்து விட்டது.
( Win key + R       This is  method to go run command)

நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருகின்றேன்.

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets