Ads 468x60px

aaaaa



Back to top

Wednesday, December 2, 2020

How To Merge Multiple rows in Ms Excel

 

How To Merge Multiple rows in Ms Excel

How To Merge Multiple rows in Ms Excel:- இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் Ms Excel இல் எப்படி ஒரே நேரத்தில் Multiple Row Merge பண்ணுவது என்பது பற்றித்தான்.

முதலில் Ms Excel  ஐ  Open செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக Merge Multiple க்குத் தேவையான Rows களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
How To Merge Multiple rows in Ms Excel



வழமையாக நாம் Merge & Center என்ற option ஐ  Click செய்து  அந்த குறிப்பிட்ட  row வை Merge & Center பண்ணுவோம். அதே போல் இதற்கும் கொடுத்தால் அது சரியாக Work பண்ணாது. 



How To Merge Multiple rows in Ms Excel



How To Merge Multiple rows in Ms Excel



ஆகவே அதற்காக நாம் வேறு ஒரு Option ஐ பயன்படுத்த வேண்டும் .அது  என்னவென்றால் Merge Across  என்பதாகும். அது எங்கடா இருக்கு என்று தேட வேண்டாம் Merge & Center Drop down இல் இரண்டாவதாக வரும் Merge Across என்பதை Select செய்யுங்கள். 

How To Merge Multiple rows in Ms Excel



  • இந்த பதிவு எழுதும் வரை நான் கூட இது அங்குள்ளதை கவனிக்கவே இல்லை . என்ன கொடுமை சரவணா .

How To Merge Multiple rows in Ms Excel

அவ்வளவுதான் இனியென்ன நடத்துங்கள். இந்த Problem த்தை நான் பல தடவைகள்அனுபவித்துள்ளேன் அதற்கான தேடல்தான் இது.






Thursday, March 1, 2018

PDF கோப்புக்களை வேறு கோப்புகளாக மாற்றம் ( Convert) செய்வதற்கு



********************************************************************************
                                                  தனிப்பட்ட விண்ணப்பம்

நண்பர்களுக்கு ஒரு  வேண்கோள் எனது பக்கத்தில் வரும் Google Advertisement  களை Click செய்து என்னையும் வாழ வைப்பீர்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.

********************************************************************************

வணக்கம் நண்பர்களே நாம் இன்று பார்க்க இருப்பது எப்படி PDF கோப்புகளை வேறு விதமான கோப்புகளாக Convert பண்ணுவது என்பதாகும். இதற்கு அருமையான ஒரு மென்பொருள் உண்டு , சந்தையில் பல விதமான மென்பொருட்கள் கிடைத்தாலும் சிலது மட்டுமே நம்மைக் கவர்கின்றது அப்படிப்பட்ட ஒன்றுதான இந்த மென்பொருள் அதன் பெயர் PDFMate ஆகும்.

Saturday, May 20, 2017

Laptop இலிருந்து Smart Phone ற்கும் Smart Phone இலிருந்து Laptop ற்கும் File ஐ Transfer செய்வது .


வணக்கம் நண்பர்களே இன்று மிகவும் சிம்பிளான ஒரு Apps & Software பற்றி பார்ப்போம்.

அதாவது நீங்கள் ஒரு தொலைதூர பயணம் செல்கின்றீர்கள் அல்லது எங்கோ செல்கின்றீர்கள் அல்லது வீட்டிலேயே இருக்கின்றீர்கள் (அடடா உங்க தொல்லை தாங்க முடியல்லடா சாமி ) என்று வைத்துக் கொள்வோம். உங்கள் Smart Phone அல்லது Laptop ஒரு File உள்ளது அதை நீங்கள் Phone போனிற்கோ அல்லது Laptop லாப்டப்பிற்கோ மாற்றிக் கொள்ள வேண்டும்.

 ஆனால் நீங்கள் உங்களுடைய கேபிளை தொலைத்து விட்டீர்கள் அல்லது யாராவது கடன்காரனிடம் கொடுத்து விட்டீர்கள் தற்பொழுது என்ன  செய்வீர்கள்.?? உங்களிடம் வைபை வசதி உண்டு ஓகே நீங்கள் மெயில் பண்ணலாம் என்று நினைப்பீர்கள் அது மிகப்பெரிய பைல் ஆகவே என்ன செய்யலாம்???? ஏதேதோ செய்யலாம் பரவாயில்லை ..(ஆனாலும் இந்த நான் சொல்லும் Method  உபயோகப்படுத்திப் பாருங்கள்அப்படி) ஒரு இக்கட்டான சூழலை முகம் கொள்ளும் முகமாகவே இப்பதிவு உங்களுக்கு......

நீந்கள் இவைபற்றி அதிகம் அறிந்திருக்கலாம் ஆனாலும் சிலர் அறியாமல் விட்டிருக்கலாம் ஆகவே அவர்களுக்கும் இப்பதிவு.

அருமையான தளம் ஒன்று உள்ளது அதில் சென்று உங்களுக்கு தேவையான Software சொபட்வெயார் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

http://www.filedropme.com/

இதுதான் நான் சொன்ன தளம் அதற்கானLink  இதுதான்.


முதலில் Laptop இல் Download செய்து Install  பண்ணுங்கள் அடுத்த படியாக எந்த Smart Phone வைத்துள்ளீர்களோ அதற்கு ஏற்ற  Apps பின் Download செய்து Install  பண்ணுங்கள்.


பிறகு உங்கள் Laptopஇலும் Smart Phone இலும் அந்த Software ஐ Open பண்ணுங்கள் அடுத்த படியாக எதிலிருந்தும் எங்கே வேண்டுமானாலும் அனுப்பிக் கொள்ளுங்கள்.

Files மிக வேகமாக Transfer  ஆகும்.

ஆனாலும் இங்கு 2 பிரச்சினைகள் உண்டு.

1. உங்கள்  Devices (Laptop and Phone) இரண்டும் ஒரே WIFI Network இல்  Connect ஆகி     இருக்க வேண்டும்.
2. IOS பாவனையாளர்களுக்கு இது இலவசம் இல்லை நீங்கள்$3செலுத்திதான் இதை பயன்படுத்த முடியும்.

கீழுள்ள Link  ஐ Copy செய்து Broswer இல் Paste  பண்ணி இதற்கான Video  வைப் பாருங்கள்.
https://vimeo.com/81272594



இனியென்ன பாவித்துப் பயன் பெறுங்கள்.

நன்றி
மீண்டும் சந்திப்போம்

Wednesday, May 17, 2017

WhatsApp இல்Bold, Italic, Strike through பயன்படுத்துவது எப்படி??


WhatsApp இல்Bold, Italic, Strike through பயன்படுத்துவது எப்படி??

எல்லோருக்கும் வணக்கம் வணக்கம் பல நாட்களாக என்னால் எழுத முடியவில்லை இன்று தற்செயலாக வாசித்த ஒரு விடயம் பற்றி உங்களுக்கு அறியத்தரலாம் என நினைக்கின்றேன். அதாவது இன்றைய வாழ்வில் முக்கிய  அங்கமாக Smart Phones மாறிவிட்டது அதிலும் இந்த  சட்டிங் அப்ஸ்(Chatting Apps)மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. அதனால் வட்ஸ்அப் (WhatsApp) பற்றி சில குறிப்புகள் இங்கே கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.
Image result for whatsapp

பெரும்பாலும்  நீங்கள் அறிந்த விடயம்தான் இருந்தாலும் தெரியாத சில மக்களுக்காக சொல்லலாம் என நினைக்கின்றேன்.சாதாரணமாக நாம்  MS Word பயன்படுத்தும் போது சில வேலைப்பாடுகளை எமது சொற்களுக்குக் கொடுப்போம் Bold, ItalicStrike through போன்றன சில உதாரணங்களாகும் அந்த வகையில் Whatsapp தற்பொழுது இந்த வசதியை தந்திருக்கின்றது நமக்காக அது நாம் மற்றவர்களுடன் சட் செய்யும் போது அவர்களுக்கும் நமக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களில் சில குறிப்பிட் மாற்றங்களை கொண்டு வரலாம்.

 Bold:  பெறுவதற்கு எழுத்துக்கு முன்னும் பின்னும்(*)  பயன்படுத்தவும். *TamilComputer*
Italics: பெறுவதற்கு எழுத்துக்கு முன்னும் பின்னும்(_)  பயன்படுத்தவும்._TamilComputer_ 
Strikethrough: பெறுவதற்கு எழுத்துக்கு முன்னும் பின்னும்(~)  பயன்படுத்தவும்                                                                                                                                          ~TamilComputer~

இனியென்ன செய்து பாருங்கள் Chat பண்ணி மகிழுங்கள். 
நன்றி மீண்டும் வருவேன் ,,,,,,,,,,,,,,,சந்திப்போம்..

Thursday, January 12, 2017

உங்களது Laptop Charger, Monitor Cable போன்றவற்றில் முடிவில் காணப்படும் சிறிய உருளை முடிச்சுகள்( Small Cylinder).


உங்களது Laptop Charger, Monitor Cable போன்றவற்றில் முடிவில் காணப்படும் சிறிய உருளை முடிச்சுகள்( Small Cylinder).

உங்களது  Laptop Charger, Monitor Cable போன்றவற்றில் முடிவில் சிறிய உருளை போன்ற முடிச்சு காணப்படும் அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?


அதுதான் ferrite core என்பதாகும்,இது கேபிள்களளில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலை (EMI) குறுக்கீடுகளை குறைக்கின்றது  இது இல்லாதவிடத்து போன்கள் சில சாதனங்களுக்கு அருகில் இருக்கும் போது சில வித்தியாசமான சத்தங்கள் ஏறபடுத்தும்.அந்த உருளையின் உள்ளே உள்ள இரும்புஅணுக்கள் மின்காந்த அலையினால் ஏற்படும் சத்தங்களை இல்லாமல் செய்கின்றது.தற்போதைய பல நவீன சாதனங்களில் இந்த இரும்பு அணுக்களைக் கொண்ட உருளைகள் காணப்படுவதில்லை ஏனென்றால் அந்த சாதனங்களின் உள்ளேயே இதற்கான தீர்வுகள் வைக்கப்பட்டுள்ளது.


Tuesday, July 12, 2016


Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் 

Android lock patterns இலகுவாக கண்டு பிடிக்கலாம் என இப்பொழுது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்ப்டுள்ளது ஏனெனில் மக்கள் எல்லோரும் பொதுவான ஒரு முறையையே இதற்காக உபயோகிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. 
Google  ஆனது தனது Android Operating system- ற்காக Android Lock Patterns (ALPs)  2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது கடவுச்சொல்லிற்கு பதிலாகAndroid’s lock-screen pattern . அதாவதுAndroid’s lock-screen pattern system என்றால் பயனாளர் கடவுச் சொல்லை தட்டச்சு செய்வதற்குப் பதிலாக 9 புள்ளிகள் கொண்ட தொடு திரையில் வடிவத்தை வரைந்து பூட்டைத் திறப்பர். இது நினைவில் வைத்துக் கொள்வதற்கு மிகவும் இலகுவாக இருந்தமையால் இதற்கான வரவேற்பு மிகவும் பிரபலமாக இருந்தது.

Monday, March 7, 2016

After the long time

Sorry

now i cant continue my site for this busy situation

Thursday, April 2, 2015

Error 498 in Play store



வணக்கம் நண்பர்களே பல காலங்களுக்குப் பின் தொடருகின்றென் என நினைக்கிறேன். எப்படியோ இன்று கட்டாயம் ஏதாவது எழுதிவிட வேண்டும் என துடிக்கும் போது கிடைத்த தலைப்பே இன்று பதிவாகின்றது.

பொதுவாக Google Play store இல் Apps download பண்ணும் போது “Error 498 has occurred while communicating with the server“. இப்படி ஒரு பிழைச்செய்தி வந்து தொல்லை படுத்தும். அதை எவ்வாறு இல்லாமல் செய்வது என்று பார்ப்போம்.

இதற்குப் பிரதான காரணமாக இருப்பது தொலைபேசியிலுள்ள Cache Partition என்பதாகும். இது நாம் செய்யும் Apps ஐ விட சிறிதாக இருந்தால் இந்த மாதிரி பிழைச் செய்தி வருகின்றது.


தொலைபேசியில் இந்த படிமுறையை பின்பற்றி அதை நிக்கி விடுங்கள்,

Settings > Applications > Manage Applications > Select Google Play store > Clear Data & Clear Cache.



இதன் பிறகு தெலை பேசியை Restart செய்து மீண்டும் Apps நிறுவிப் பாருங்கள் . இப்பொழுது Install ஆகும். பிறகு என்ன நடத்த வேண்டியதுதான்.

நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருகின்றேன்.

Sunday, January 19, 2014

உங்களது OS அதாவது Windows எப்பொழுது Install செய்யப்பட்டு இருக்கின்றது

வணக்கம் நண்பர்களே  இது இந்த வருடத்தின் (2014) எனது முதலாவது பதிவு. வெகு நாட்களாக உடல் நலம் இல்லாமையால் என்னால் தொடர முடியாமல் போய் விட்டது இனி மெல்ல மெல்ல தொடரும் நமது பதிவுகள். 

சரி இன்று பார்க்க இருப்பது என்னவென்றால் உங்களது OS அதாவது Windows  எப்பொழுது Install செய்யப்பட்டு இருக்கின்றது என்பதை எவ்வாறு பார்க்கலாம் என்பது பற்றித்தான்.

Monday, December 16, 2013

Html Table...

வணக்கம் நண்பர்களே இன்று மற்றொரு பதிவுடன் இணைகின்றேன் நான் உங்களுடன்.HTML இல் Table ஒன்றை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
இங்கு Tableஉருவாக்க <table> </table> என்ற Tag பயன்படுகின்றது.எப்பவும் ஒரு  Table இல் Row,Column என்பன அடங்கியிருக்கும். நாம் Html இல் Row வை மட்டுமே உருவாக்குவோம்.அதற்கு  <tr> Table Row என்ற  Tag பயன்படுகின்றது. ஒவ்வொரு Row விலும் எத்தனை Cell வர வேண்டும் என அடுத்த படியாக உருவாக்குவோம். அதற்கு  <td> Table Data என்ற  Tag பயன்படுகின்றது.

<table>
<tr>
<td>Name</td>
<td>Address</td>
</tr>

<tr>
<td>sadun</td>
<td>battilcaloa</td>
</tr>

</table>

உதாரணத்திற்காக இப்படி நான் ஒரு Coding எழுதியுள்ளேன் அதன் விடை எவ்வாறு அமையும் எனப் பார்க்கலாம்
நீங்கள் வியப்பாய் பார்ப்பது விளங்குகின்றது என்னடா இது Table என்றா Row, Column எல்லாம் வேணும் இங்கு ஒன்றையும் காணலையே.....   இதுதானே அதற்கும் நீங்கள் இன்னுமொரு வேலை செய்ய வேண்டும் அது என்னவென்றால்.
<table border="1">
<tr>
<td>Name</td>
<td>Address</td>
</tr>

<tr>
<td>sadun</td>
<td>battilcaloa</td>
</tr>

</table>

பழைய Coding இல் நான் ஒரு மாற்றம் மட்டுமே செய்தேன் அதுதான் <table border="1">   இப்பொழுது பாருங்கள் மாற்றத்தின் பலனை.
இங்கு நாங்கள் கொடுக்கும் Border அளவிற்கேற்ப அதன் Border இன் அளவும் மாறிக் கொண்டே போகும் தேவை இல்லை என்றால் Border ஐ பற்றி கதைக்க வேண்டிய அவசியமே இல்லை.


அதே போல் நாம் Cell  ற்கு Border ஒன்று கொடுக்க  இப்படி coding ஐ பயன்படுத்துவோம'. <th> </th> Table Heading  என்று பொருள்படும்.

<table border="1">
<tr>
<th>Header 1</th>
<th>Header 2</th>
</tr>
<tr>
<td>row 1, cell 1</td>
<td>row 1, cell 2</td>
</tr>
<tr>
<td>row 2, cell 1</td>
<td>row 2, cell 2</td>
</tr>
</table>

Output
Header 1Header 2
row 1, cell 1row 1, cell 2
row 2, cell 1row 2, cell 2

நாம் Table ற்குள்  Text, Links, Images, Lists, Forms, Other Tables போன்றவற்றை பயன்படுத்தலாம்

நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

MS Excel 2010 நாட்களுக்கிடையிலான வித்தியாசத்தை பார்ப்பது எப்படி .

வணக்கம் நண்பர்களே மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதியும் பதிவு இது. சரி இன்று MS Excel 2010  இல் இரண்டு குறிப்பிட்ட மாதங்கள் அல்லது நாட்களுக்கிடையிலான வித்தியாசத்தை பார்ப்பது எப்படி என்று சொல்லலாம் என நினைக்கின்றேன்.முதலில் இதற்கு என்று ஒரு கணக்கை உருவாக்கி பார்ப்போம் வெறும் உதாரணத்திற்காக மட்டுமே இது இதைப் பயன்படுத்தி நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

Tuesday, November 19, 2013

MS Excel 2010 REPT Formula

வணக்கம் நண்பர்களே இன்று  MS Excel 2010 இன் ஒரு பதிவுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. சரி கதைக்கு வருவோம் அருமையான பல Function கள் MS Excel 2010 உள்ளது ஆனாலும் நமக்கு சிலவற்றைத்தான் தெரிந்து உள்ளது ஆனாலும் சிலருக்கு தெரிந்திருக்கலாம் தெரியாதவர்களுக்குத்தான் இந்த பதிவுகள் இடம் பெறுகின்றது என்பதை அறியத்தருகின்றேன்.இன்று நாம் பார்க்க இருப்பது REPT Formula  பற்றி ஆகும்.

நாம் சிலவேளைகளில் யோசித்திருப்போம் எமக்கு தேவையான எண்ணிக்கைக்கு சமமான அளவு எமக்கு பிடித்த எழுத்துக்களை அல்லது வேறு Special Character களை எப்படி போடவைப்பது என்று. அதற்குத்தான் இன்று இந்த REPT Formula  வை நான் பயன்படுத்த போகின்றேன்.

முதலில் MS Excel 2010 இற்குச் சென்று இவ்வாறு Table  உருவாக்கிக் கொள்க.





நான் உதாரணத்திற்கு இப்படி 5 பெயர்களையும் அதற்கான எண்ணிக்கைகளையும்  கொடுத்துள்ளேன். எனக்கு வரைபில் வரவேண்டிய எழுத்து " @"ஆகும்.

=rept("@",B2)
நமக்கு வரவேண்டிய எழுத்தை '' '' குறிக்குள் கொடுத்துள்ளேன்.இல்லாவிடின் பிழையாகிவிடும்.




பாருங்கள் நீங்கள் கொடுத்த எண்ணிக்கைக்கு அளவான எண்ணிக்கையில் எழுத்து வந்துள்ளதை அவதானியுங்கள்.

 இதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் இந்த len formulla வைப் பயன்படுத்தி எண்ணிக்கையை பார்க்கவும். சரியாக இருக்கின்றதா.சரியாத்தான் இருக்கும்.
=Len(C2)





நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

Sunday, November 17, 2013

Google translator ஐ Music போடவைக்க வேண்டுமா

வணக்கம் நண்பர்களே இன்று Google Translator பற்றி ஒரு நகைச்சுவையான தகவலைப் பார்ப்போம் அதாவது நீங்கள் Google translator. சென்று கீழே உள்ளவற்றை அப்படியே Copy-Paste பண்ணிவிடுங்கள்.


pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk pv zk bschk pv zk pv bschk zk pv zk bschk pv zk pv bschk zk bschk pv bschk bschk pv kkkkkkkkkk bschk bschk bschk






 பின்பு அங்கே German  மொழியினைத் தெரிவு செய்யுங்கள். அதற்குப் பின் கீழே உள்ள Beatbox ( Speaker) Images தெரிவு செய்க அங்கே நடக்கும் ஆச்சரியம் பாருங்கடா Google translator Music போடுது. 


இது சும்மா

 நன்றி வேறு ஒரு பதிவுடன் தொடருவோம்

Friday, November 15, 2013

இலகுவாக Open செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது

வணக்கம் நண்பர்களே மீண்டும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடருகின்றேன். Microsoft ஆனது உலகத்தில் பல பாகங்களிலும் பாவனையிலுள்ள ஒரு Operating System ஆகும். ஒவ்வொருவருடைய பாவனை முறைகளும் தேவைகளும் இடத்திற்கிடம் மாறும். மிகப் பெரிய வேலைகளை மிகச் சுலபமாக நடாத்தி முடிக்க பல Software  கொண்டுள்ளது இது. அவ்வளவு பெரிய மென்பொருட்களை இயக்க நாம் பல முறைகளைக் கையாள்வோம் அதில் ஒன்றுதான் Run Command ல் Shortcut  மூலம் நமக்குதேவையான மென்பொருளை Open செய்வது. இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் எப்படி நாம் ஒரு மென்பொருளுக்கு Windows Run Command  இல் இலகுவாக Open  செய்யக் கூடியவாறு Shortcut அமைப்பது என்பது பற்றி ஆகும்.முதலில் நாம் தெரிந்திருக்க வேண்டியது என்ன வென்றால் நாம் கொடுக்கும் பெயர் ஏற்கனவே பாவனையில் இருக்ககூடாது.

Sunday, November 3, 2013

Google Fun...............!!

வணக்கம் நண்பர்களே இன்று  நான் கூகிள் பற்றி Magic செய்து காட்டப் போகின்றேன் வேறு ஒன்றுமில்லை சின்ன வேலை தான் ஆனால் நல்ல சுவாரசியமாக இருக்கும். 
1.முதலில் Google  க்கு சென்று  zerg rush  என செய்யுங்கள்  பாருங்கள் அதிசயத்தை எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு வருகின்றது.

 






2.முதலில் Google  க்கு சென்று  "Google terminal-"  என செய்யுங்கள் பாருங்கள் அதிசயத்தை 



இது சும்மா ............................!!!
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.

Saturday, November 2, 2013

எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது அதுவும் உங்களுக்கு பிடித்த Password உடன்

வணக்கம் நண்பர்களே இன்று நான் உங்களுடன் பகிர இருப்பது என்னவென்றால்  எந்தவித மென்பொருளும் இல்லாமல் Folder ஒன்றை எப்படி பாதுகாப்பது  அதுவும் உங்களுக்கு  பிடித்த Password உடன். என்னது பாதுகாப்பா நம்பமுடியல்லையே ம்ம்ம்ம்.........பொறுங்கள் பொறுங்கள் எல்லாம் சொல்லுகின்றேன்.அதற்கு முன் நான் உங்களை ஒரு Software Developer ஆக மாற்றுகின்றேன். நான் சொல்வதை எழுதி முடித்தால் நீங்களும் உங்களுக்கு பிடித்த பெயரில் ஒரு மென்பொருளை உருவாக்கி இருப்பீர்கள். வாருங்கள்  Software Developer வாருங்கள்.

Thursday, October 31, 2013

MS Excel இல் எப்படி Photo எடுப்பது .............

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது என்னவென்றால் MS Excel  இல் எப்படி Photo எடுப்பது என்று. என்னது Photoவா Excel லா நம்ப முடியல்லயே . நம்பணும் நம்பித்தான் ஆகனும் இது உங்கள் கடமை பீலாவுடறத நிப்பாட்டு சரி விசயத்திற்கு வா என்று சொல்வது விளங்குது சரி சரி விடுங்கப்பா விடுங்கப்பா.சரி விசயத்திற்கு வருவோம் நாம் பொதுவாகExcel இல் உள்ளதை ஒரு Image File  ஆக மாற்றுவதற்கு  வேறு வேறு நடவடிக்கைகள் எடுப்போம்அதை விட நான் சொல்ல இருப்பது மிக இலகுவான முறை பற்றி ஆகும். இனி நடவடிக்கைக்குள் இறங்குவோம்.


Tuesday, October 29, 2013

MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு........!!

வணக்கம் நண்பர்களே இன்று MS Word 2010  சம்மந்தமான ஒரு பதிவுடன் சந்திக்கின்றேன்.இது ஒரு அருமையான படைப்பு என்றுதான் சொல்ல வேண்டும் நாங்கள் சில காலங்களுக்கு முன்பு MS Word இல் இருப்பதை MS PowerPoint கொண்டு செல்வதற்கு பல இன்னல்களை எதிர் நோக்கியிருந்தோம் இப்பொழுது இதற்கு அழகான ஒரு நிவர்த்தியைக் கொடுத்துள்ளது Microsoft அது பற்றித்தான் இன்று பார்ப்போம்.சரி இதை மேற்கொள்வதற்கு நாம் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் உங்களுக்கு  Quick Access toolbar பற்றி தெரிந்திருக்கும் அதிலேதான் எமது மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றோம்.

Monday, October 28, 2013

MS Excel INFO function ................!!

வணக்கம் நண்பர்களே இன்று MS Excel  பற்றிய பதிவுடன் உங்களைச் சந்திக்கின்றேன். நாம் பல Function களை Excel  லில் பார்த்திருப்போம் நான் சொல்ல வரும் Function  அப்படிப்பட்டதுதான் பலருக்கு அனேகமாக தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமல் இருக்கும்  அவர்களுக்காகத்ததான் இதைப்பதிகின்றேன்.இந்தப் Function னினுடைய பெயர்  INFO function  ஆகும். மிகவும் பிரதானமான என்று சொல்ல முடியாவிட்டாலும் சில தேவைகளுக்காக இதைப்பயன்படுத்தலாம். அதாவது நமது Excel பற்றிய தகவல்களைப் பார்வையிடவே இது பயன்படுகின்றது. ஆகவேதான் முக்கியமானது என்று இதை நான் கருதவில்லை சிலருக்கு தங்கள் தேவைகளைப் பொறுத்து முக்கியமானதாகப்படலாம்.

Sunday, October 27, 2013

வேகமாக Copy பண்ணும் ஒரு Software WinMend File Copy

வணக்கம் நண்பர்களே இன்று வேகமாக Copy பண்ணும் ஒரு Software பற்றி பார்க்க இருக்கின்றோம். வழமையாக மிகப்பெரிய File களை Copy பண்ணுவதற்கு அதிகளவான நேரம் எடுக்கும்.சில சமயம் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிடுவோம் அதற்குத்தீர்வாகத்தான் நான் இந்த மென்பொருள் பற்றி உங்களுக்கு அறியத்தருகின்றேன்.சரி இனி மென்பொருள் பற்றிப்பார்ப்போம். இது மிகவும் இலகுவான Interface (இடைமுகப்பைக் ) கொண்டது ஆனால் மிகவும் அதிவேகமான தரவு மாற்றத்தை செய்யக்கூடியது. அதன் பெயர் WinMend File Copy  என்பது ஆகும். இது சாதாரணமாக கணணி Copy செய்யும் வீதத்தைவிட 300 மடங்கு வேகமாக Copy  செய்வதாக நிறுவனத்தினர் சொல்கின்றனர்.(www.winmend.com).

Popular Posts

Most Special Post

Blogger Widgets