வணக்கம் நண்பர்களே இது இந்த வருடத்தின் (2014) எனது முதலாவது பதிவு. வெகு நாட்களாக உடல் நலம் இல்லாமையால்
என்னால் தொடர முடியாமல் போய் விட்டது இனி மெல்ல மெல்ல தொடரும் நமது பதிவுகள்.
சரி இன்று
பார்க்க இருப்பது என்னவென்றால் உங்களது OS அதாவது Windows எப்பொழுது Install செய்யப்பட்டு
இருக்கின்றது என்பதை எவ்வாறு பார்க்கலாம் என்பது பற்றித்தான்.
அதாவது ஏன் இதை
பதிவிடுகின்றேன் என்றால் எனது நண்பர் ஒருவர் மடிக்கணிணி Laptop ஒன்று வாங்கியிருந்தார் அவருக்கு
கொடுத்தவர் இது வாங்கி இரண்டு மாதம் என்று சொல்லியிருந்தார் இவரும் நம்பி வாங்கி விட்டார்
ஆனால் எல்லாம் புதுசு போலவே தோற்றம் அளித்திருந்தது. எல்லாம் சோதித்து விட்டு
பிறகுதான் பார்த்தார் அதனுடைய OS ஆனது ஆறு மாதங்களுக்கு முன்னரே Install பண்ணப்பட்டிருந்தது
தெரிய வந்தது. இதைப் போல் பிழைகளை விடாமல் இருப்பதற்கு ஆகவே இந்த பதிவு அதற்கு நீங்கள்
செய்ய வேண்டியது எல்லாம் Command Prompt (DOS) சென்று அங்கே Systeminfo.exe என Type செய்து Enter பண்ணுங்கள். அவ்வளவுதான் உங்கள் கணணி பற்றிய அனைத்து தகவல்களும் அப்படியே
தெரிய வரும்.
பாருங்கள் எல்லா விபரங்களும் எப்படி தெரிகின்றது என்று. அவ்வளவுதான்.
நன்றி மீண்டும் ஒரு பதிவுடன் தொடருவோம்.
0 comments:
Post a Comment