வணக்கம் நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு எனக்கு E-Mail மூலமாக வந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவை எழுகின்றேன். அதாவது HTML 5 ப் பற்றி எழுத வேண்டியிருந்தீர்கள் .இதோ உங்களுக்கு அதைப்பற்றி விவரங்களை தருகின்றேன்.இனி இதைப் பற்றி மேலதிக தகவல்கள் அடுத்த அடுத்த பதிவுகளில் வெளிவரும்.
HTML 5 என்பது புதிய மொழி அல்ல அது ஏற்கனவே வெளிவந்த HTML இன் புதிய பதிப்பு அல்லது நிலை எனலாம்.1999 ஆம் அண்டு முதல் HTML/ HTML 4.1 என்பன வெளியாகின அன்றிலிருந்து இணையத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். இப்பொழுது HTML 5 ஆனது பல Browser களை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம். மிக விரைவில் வந்திருந்தாலும் எல்லா Browser களும் இதற்கு (Support) ஆதரவாக வேலை செய்கின்றது.
HTML 5 ஆனது World Wide Web Consortium (W3C) இற்கும் Web Hypertext Application Technology Working Group (WHATWG) இற்கும் இடைப்பட்ட ஒரு கூட்டுத்தாபனம் ஆகும். WHATWG ஆனது வலை படிவங்கள்( Web form) மற்றும் Application போன்றவற்றையும் W3C ஆனது XHTML2.0 போன்றவற்றையும் கவனித்துக் கொண்டு வந்தார்கள்.அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து HTML இன் ஒரு புதிய பதிப்பு உருவாக்க முடிவு செய்தனர் அதுதான் HTML 5 ஆகும்.
HTML 5 இல் பழைய HTML பதிப்பை விட ஏராளமான புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- புதிய வசதிகள் எல்லாம் HTML, CSS, DOM, and JavaScriptஎன்பவற்றை தழுவியதாக அமைந்துள்ளது.
- வெளியிலிருந்து செயல்படும் Plugins தேவைகளை குறைத்துள்ளது.(like Flash)
- சிறந்த முறையில் பிழைகளை கையாளுதல்.
- scripting பதிலாக மேலதிகமான markup.
- HTML5 எல்லா சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
- அதனுடைய வளர்ச்சி படிகள் மக்களுக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும் என்பது கட்டாயமாக இருக்கின்றது.
- The <canvas> element for 2D drawing
- The <video> and <audio> elements for media playback
- Support for local storage
- New content-specific elements, like <article>, <footer>, <header>, <nav>, <section>
- New form controls, like calendar, date, time, email, url, search
இதுதான் HTML 5 இன் புதிய வடிவமைப்பு ஆகும்.
நன்றி மீண்டும் தொடருவோம்.
1 comments:
if you feel very useful for you please put on some comments,it is growth my interest.
Post a Comment