என்னுடைய தோழர்களின் தேவைப்பாட்டிற்கு இணங்க இந்தHTML பற்றிய பதிவு நடைபெறுகின்றது. இது அங்கம் அங்கமாக என்னுடைய வலைப்பூவில் வந்து கொண்டே இருக்கும். கேள்விகள் இருந்தால் எனது Email முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
எச்.டி.எம்.எல் (இலங்கை வழக்கம்: எச்.ரி.எம்.எல்) அல்லது மீசுட்டு மொழி என்பது வலைப்பக்க வடிவமைப்பை (Web page) வரையறை செய்யும் ஒரு அடிப்படை குறியீட்டு மொழி ஆகும். முதல் வலைப்பக்கங்கள் எழுதப்பட்ட மொழி இதுவே ஆகும். இன்றும் இதுவே அனேக வலைப் பக்கங்களுக்கும், பின்னர் வந்த பல மொழிகளுக்கும் அடிப்படையாக அமைக்கிறது. HTML Documents .html அல்லது .htm கோப்பு நீட்சி கொண்ட கோப்புக்களாக அமையும்.