Ads 468x60px

aaaaa



Back to top

Sunday, September 22, 2013

HTML 5 அறிமுகம்

வணக்கம் நண்பர்களே சில நாட்களுக்கு முன்பு எனக்கு E-Mail மூலமாக வந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவை எழுகின்றேன். அதாவது HTML 5 ப் பற்றி எழுத வேண்டியிருந்தீர்கள் .இதோ உங்களுக்கு அதைப்பற்றி விவரங்களை தருகின்றேன்.இனி இதைப் பற்றி மேலதிக தகவல்கள் அடுத்த அடுத்த பதிவுகளில் வெளிவரும்.

HTML 5 என்பது புதிய மொழி அல்ல அது ஏற்கனவே வெளிவந்த HTML இன் புதிய பதிப்பு அல்லது நிலை எனலாம்.1999 ஆம் அண்டு முதல் HTML/ HTML 4.1 என்பன வெளியாகின அன்றிலிருந்து இணையத்தில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். இப்பொழுது HTML 5 ஆனது பல Browser களை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று சொல்லலாம். மிக விரைவில் வந்திருந்தாலும் எல்லா Browser களும் இதற்கு (Support) ஆதரவாக வேலை செய்கின்றது.

Offline And Online அகராதி

வணக்கம் நண்பர்களே பல நாட்களின் தேடலின் பின் இந்த பதிவை உங்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.நானும் சொந்தமாக பதிவுகள் எழுதுவதில்லை அது எப்படி முடியும் எல்லாம் எங்கிருந்தோ  சுட்டதுதானே ஆனாலும் அதை நியாயயப்படுத்த விரும்பவில்லை ஏனென்றால் நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை ஆஹா இப்படியும் ஒன்றா சரி விடுங்கப்பா இப்பத்தான் சொந்தமா எழுதத் தொடங்கி இருக்கன்..பல வேளைகளில் சில  ஆங்கில சொற்களுக்கு எனக்கு சரியான தமிழ் அர்த்தம் விளங்கவில்லை என்ன செய்யலாம் ஒரு டிக்சனரி(அகராதி) பாவித்தேன் புரட்டினேன் அது ரொம்க குஸ்டம் அப்பா சொரி சொரி கஸ்டம் அப்பா. நாமதான்  IT Peopleலே பிறகு என்ன Online  இல் சில முகவரிகளில் தேடித்தேடி  எடுத்தேன் அதுவும் திருப்தி இல்லை.எப்பவும் நமக்கு ஒன்றிலும் திருப்தி இல்லைதானே தேடல்தான் முக்கியம் இன்னும் என் நண்பனுடன் (Google) தேடினேன் அப்போது அழகான ஒரு முகவரி கிடைத்தது.

Friday, September 20, 2013

Google Chrome பிழைச்செய்தியை நீக்க

சிலர் என்னிடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க நான் இப்பதிவை எழுதுகின்றேன். அதாவது சிலர் தங்கள் Browser  ஐ திறந்து  Facebook ற்கு செல்வதற்காக முகவரியை தட்டிவிட்டால் ஒரு Window Open ஆகி Different Alert  வந்திருக்கும் எப்படி முயற்சிசெய்தாலும் உள்ளே செல்ல முடிவதில்லை இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தனர்.


Thursday, September 19, 2013

உங்கள் Computer இல் இருந்த படியே உங்கள் Phone கண்காணிக்க


நான் சில மாதங்களுக்கு முன் பட்ட கஷ்டம் பற்றியதுதான் இந்தப் பதிவு. அது எப்படி ஆரம்பிப்பது சரி வந்தாச்சு ஆரம்பிச்சுதான் பார்ப்போமே .நான்  Samsung Galaxy Y என்ற Hand phone  பாவிக்கின்றேன் முதலில் USB Cable  இணைத்து எனது Memory Stick இல் உள்ள தகவல்களைப் பார்ப்பேன். அது பெரிய விசயமில்லை. ஆனாலும் எனக்கு ஒரு ஆசை அதாவது Nokia PC suite  போல் ஏதாவது என் போனுக்கு இருக்குமா என்று தேடினேன் தேடினேன் என் நண்பன் Google  இல் தேடினேன் அவன் பல முகவரிகளைத்தந்தான் ஆனால் எனக்கு பெரிதாக ஒன்றும் திருப்தி இல்லை. அதில் KITE என்ற ஒரு Software பாவித்தேன் அது ரொம்ப  Lateஆக எல்லாம் Slow ஆனது. எனக்கு பிடிக்கவில்லை. அந்த ஆசை என்னை விடவில்லை ஆனாலும் தேடுதல் ஒரு புறம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

Tuesday, September 17, 2013

I Phone 5s


1.ப்ராசசர்: 

ஏறத்தாழ நூறு கோடி ட்ரான்சிஸ்டர்களுடன் கூடிய 64 பிட் ப்ராசசர் கொண்ட முதல் மொபைல் போனாக ஐபோன் 5 எஸ் வந்துள்ளது.


2. விரல் ரேகை: 

டச் ஐடி (“Touch ID”) என்று அழைக்கப்படும் இந்த போனில், வெகுகாலமாக எதிர்பார்த்த, விரல் ரேகை அறியும் சென்சார் வசதி தரப்பட்டுள்ளது. 

பயனாளர்கள், இதனைப் பயன்படுத்தி, போனை இயக்கலாம். இது தேவை இல்லை என்றால், முன்பு போல நான்கு இலக்க பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம். அல்லது பாஸ்வேர்ட் இல்லாமலும் பயன்படுத்தலாம்.


3. பேட்டரி

தொடர்ந்து 10 மணி நேரம் 3ஜி இயக்கம் தரக் கூடிய திறன் கூடிய பேட்டரி தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் மின்சக்தியைக் கொடுக்கும். தொடர்ந்து 10 மணி நேரம் வீடியோ பார்க்கலாம்; 40 மணி நேரம் ஆடியோ கேட்டு ரசிக்கலாம்.


4. கேமரா: 

இதன் ஐ சைட் (iSight) கேமரா 28 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லென்ஸ் இயங்குகிறது. தொடர்ந்து ஒரு விநாடியில் 10 படங்களை எடுக்கும் “burstmode” கிடைக்கிறது. 

தானாக போகஸ் செய்திடும் வசதி, முகம் அறிந்து இயக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இதன் வீடியோ பதிவு நொடிக்கு 30 பிரேம்களைப் பதிகிறது.


5. இயக்கும் சிப்: 

இதில் இயங்கும் 64 பிட் ஏ7 சிப், இதற்கு முன் இருந்த ப்ராசசர்களைக் காட்டிலும் 56 மடங்கு வேகமாக இயங்கவல்லது. இதனால், ஐபோன் எஸ்5ல் உள்ள சில அப்ளிகேஷன்கள், ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் இயங்கும். இத்துடன் எம்7 (M7) என்ற பெயரில் சிப் ஒன்றையும், ஆப்பிள் இதில் தருகிறது. இது ஒரு “motion coprocessor”. இது பல அப்ளிகேஷன் புரோகிராம்களின் வேகத்தை அதிகப்படுத்துகிறது.


6. இலவச அப்ளிகேஷன்கள்: 

இதுவரை கட்டணம் செலுத்திப் பெற்ற Apple’s Pages, Numbers, Keynote, iPhoto, and iMovie apps அப்ளிகேஷன்கள் இதில் இலவசமாகவே இணைத்துத் தரப்படுகின்றன. 


7. வடிவமைப்பு: 

இதன் பரிமாணங்கள்: 123.8 x58.6 x 7.6 மிமீ. எடை 112 கிராம்.


8. திரை: 

மல்ட்டி டச் வசதியுடன் 4 அங்குல திரை 1136 x 640 பிக்ஸெல் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 


9. சிம்: 

இதில் நானோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். தற்போது பயன்படுத்தப்படும் மைக்ரோ சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியாது.


10. மொழிகள்: 

இதில் தமிழ் உட்பட பல உலக மொழிகளைப் பயன்படுத்தலாம். அதே போல பல மொழிகளுக்கான அகராதிகளும் கிடைக்கின்றன.முன் கூட்டியே சொற்களைத் தரும் predictive text மற்றும் தானாகவே சொற்களைத் திருத்தும் (auto correct) வசதிகள் உள்ளன. 

thanks therinjikko blog

Popular Posts

Most Special Post

Blogger Widgets