ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...
Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக
இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய
வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும்
என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று
அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும்
குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன்
உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது.
அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை
செய்யுமாறு ஒரு
Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.
1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.
2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30 (இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )
3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.
4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ்
உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை
அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart
ஆகிவிடும்.
5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று
shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும்.
நன்றி!பொன்மலர்