Ads 468x60px

aaaaa



Back to top

Monday, July 16, 2012

Google Search Engine 'னில் தமிழில் Type செய்யலாம்.


வாழ்க தமிழ்............வாழ்க தமிழ்...........வாழ்க தமிழ்............வாழ்க தமிழ்.............



நாம் தினமும் கூகிள் Search Engine உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுகிறோம்.  இது தமிழர்கள் செய்யும் மிக பெரிய தவறு தமிழ் தளங்களை நாமே ஒதுக்கி வைத்தால் யார் தான் தமிழ் தளங்களை படிப்பது நமக்காகதான் அவர்கள் நேரம் செலவழித்து எழுதுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நாம் தொடர்ந்து தமிழில் தேடுவதால் தமிழில் எழுதுபவர்களுக்கும் ஆர்வம் உண்டாகும். நாம் கூகுளில் தமிழில் தேடாததற்க்கு முக்கிய காரணம்.  நம்மால் கூகுளில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாது என்பதே.
 
அதற்க்கு ஒரு வசதி உள்ளது. தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
 பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளது போல் தேடுதல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள தமிழ் Keyboard Click செய்துக் கொள்ளுங்கள்.


 இப்போது உங்களுக்கு ஒரு  Popup Keyboard வரும்.  அதை மூடாமல் தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்யுங்கள்.  இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.


என் இனிய தமிழை வளர விடுங்கள் வாழ விடுங்கள்

Sunday, July 15, 2012

உங்கள் கணணியில் Pen Drive சொருகும் போது NEWFOLDER.EXE virus அவதானித்தால்

நாம் எங்கு போனாலும் எம்முடன் ஒரு  Pen driveஇருக்கும். எமக்கு தேவையான விடயங்களை உடனடியாக  Internet இல் தேடி எடுத்து விட்டுPendrive  save  பண்ணுவோம். ஆனால் அங்கு எமது பென் டிரைவ் பாதுகாப்பாக இருக்கும் என்று எந்த நம்பிக்கையில் இருக்கலாம் சொல்லுங்க பார்ப்பம்.
அங்கு இங்கு எங்கு வேணுமானாலும் உங்களுக்கு இப்படி வைரஸ் தொல்லை இருந்தால்

Task manager is disabled.
Registry Editor is disabled.
Folder options not working.
Taking too much time for accessing pendrive.
Uses half of your computers processing power.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதாங்க உடனடியாக இந்த சொப்ட்வெயாரை டவுன்லோட் பண்ணுங்க Smart Virus Remover.

பிறகு இப்படி செய்யுங்க

Wednesday, July 11, 2012

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...

Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும்.


 நன்றி!பொன்மலர்

கோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்

உங்கள் நண்பர் ஒரு சுருக்கப்பட்ட கோப்பை ( Compressed or Zipped ) .zip அல்லது .rar வகையில் கொடுக்கும் போது அதை விரிப்பதற்கு ( Extract ) உங்கள் கணினியில் Winzip அல்லது WinRar போன்ற மென்பொருள்களை நிறுவாமல் இருப்பீர்கள். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறாமல் பின்வரும் இணையதளங்களில் சென்று நீங்கள் ஒன்லைனிலேயே விரித்துக்கொள்ளலாம். மேலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இந்த தளங்களிலேயே சுருக்கிகொள்ளலாம்.

1. FileStomp

2. Nippy Zip

3. WobZip

இன்றைய சுதந்திர மென்பொருள் : Mozilla Thunderbird

இது Outlook Express , MS-Outlook போல ஒரு POP3 மின்னஞ்சல் நிர்வாக மென்பொருள் (POP3 Email Client Application ) ஆகும். இது புகழ் பெற்ற Mozilla நிறுவனத்தின் மென்பொருள். இதில் உள்ள வசதிகள் :


Message Tagging
Improved Search
Advanced Folder Views
Add-ons Manager for Extensions and Themes
Phishing Protection
Automated Update

தரவிறக்கசுட்டி :http://www.mozillamessaging.com/en-US/thunderbird/
நன்றி !

எக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்பிட்ட நிபந்தனைப்படி தனித்துக்காட்ட..


MS Excel இல் அட்டவணையாக அமைந்த தகவல்களை வரிசை மற்றும் நெடுவரிசையாக வைத்து பயன்படுத்தலாம். இதில் ஒரு கோப்பை Spreadsheet என்பர். ஒரு கோப்பில் நிறைய எண்கள் மற்றும் சொற்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம். எதாவது ஒரு வரிசையில் அடங்கிய தகவல்களை அழகுபடுத்த Format சென்று வண்ணங்களை மாற்றுவோம்; எழுத்துகளின் அளவை பெரிதாக்குவோம்; பின்புறத்தில் உள்ள வண்ணத்தை மாற்றுவோம். ஆனால் ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட செல்களை (Cell) மட்டும் வண்ணத்திலோ அல்லது வேறு வகையிலோ எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுவது? இதற்கு உதவுவது தான் Conditional Formatting ஆகும்.

Conditional Formatting என்றால் என்ன?

குறிப்பிட்ட நிபந்தனையைக்கொடுத்து அதற்கு ஒத்துப்போகிற தகவல்களை மட்டும் அழகுபடுத்துவது தான் Conditional Formatting ஆகும். எடுத்துக்காட்டுக்கு பள்ளியின் மதிப்பெண் பட்டியலைக் கொள்வோம். இதில் கணக்கில் 100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டும் பளிச்சென்று சிகப்பு வண்ணத்தில் தெரிய வேண்டும்.அதைப்போல மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட வண்ணத்தில் தெரியவேண்டும். பார்த்தவுடனே கண்டுகொள்கிற மாதிரி இருக்க வேண்டும்.

Example for Conditional Formatting in Excel

A1 என்ற செல்லில் பெயரும் B1 என்ற செல்லில் சம்பளம் ருபாயிலும் இருப்பதாக
எடுத்துக்கொள்வோம்.நிபந்தனை : 15000 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் மட்டும் பின்புறத்தில் பச்சை வண்ணத்திலும் அதற்கு கீழ் வாங்குபவர்கள் சிகப்பு நிறத்திலும் தெரிய வேண்டும்.

இப்போது தேவையான செல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு B2 என்ற
நெடுவரிசையில் மட்டும் சம்பளம் இருப்பதால் நாம் அந்த நெடுவரிசையில் தகவல்கள் உள்ள அத்தனை செல்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் எண்கள் அமைந்த செல்கள் அனைத்தையும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

Conditional Formatting in MS Excel
வேண்டிய பகுதியைத் தேர்வு செய்த பின் Format -> Conditional Formatting என்பதை
கிளிக் செய்யவும். இப்போது ஒரு விண்டோ திறக்கப்படும். அதில் முதல் கட்டத்தில் Cell value is என்று இருக்கும். இரண்டாவது கட்டத்தில் நமக்குத் தேவையான நிபந்தனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் greater than என்பதையும் மூன்றாவதில் 15000 என்பதையும் கொடுக்கவும். பின்னர் Format பொத்தானை அழுத்தினால் எந்த மாதிரி அழகுபடுத்தலாம் என்பதைச் செய்ய முடியும். இதில் மூன்று வகையான Formatting வசதிகள் உள்ளன.

Conditional Formatting in MS Excel

Fonts டேபில் எழுத்தின் அளவு, வண்ணம் போன்றவற்றை மாற்றலாம்.
Borders டேபின் மூலம் செல்களுக்கு பார்டர் கொடுக்கலாம்.
Patterns டேபின் மூலம் செல்களுக்கு பின்புற வண்ணத்தைக் கொடுக்கலாம். இதில் நாம் தேவையான சிகப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்து Ok செய்யவும்.

Conditional Formatting in MS Excel
இப்போது நாம் குறிப்பிட்டிருந்த செல்களுக்குள் நிபந்தனை எங்கெங்கு பொருத்தமாகிறதோ அதெல்லாம் பின்புறத்தில் சிகப்பு நிறத்தில் மாறியிருக்கும். அடுத்து 15000 க்கு கீழே உள்ளவர்களுக்கு பச்சை நிறத்தில் மாற வேண்டும். மீண்டும் Format - > conditional formatting சென்று Add பட்டனை கிளிக் செய்து அடுத்த நிபந்தனையைக் கொடுக்கலாம். இப்போது நிபந்தனையில் less than கொடுத்து 15000 எனக்கொடுத்து தேவையான வண்ணத்தைத் தேர்வு செய்து விட்டால் முடிந்தது.

Conditional Formatting in MS Excel
Conditional Formatting in MS Excel
மொத்தம் மூன்று நிபந்தனைகள் வரை கொடுக்கலாம். இவை வேண்டாம் என்றால் தேவையான செல்களைத் தேர்வு செய்து Conditional formatting சென்று Delete கொடுத்து விடலாம். முதலிலேயே ஒரு worksheet முழுவதும் தேர்வு செய்து நிபந்தனைகளைக் கொடுத்து விட்டால் நீங்கள் அடிக்கும் தகவலுக்கேற்ப வண்ணங்களும் மாறிக்கொண்டே வரும்.


பயனுள்ள தகவல்கள்.. நன்றி! வாழ்த்துக்கள்..!

Popular Posts

Most Special Post

Blogger Widgets