WhatsApp இல்Bold, Italic, Strike through பயன்படுத்துவது எப்படி??
எல்லோருக்கும் வணக்கம் வணக்கம் பல நாட்களாக என்னால் எழுத முடியவில்லை இன்று தற்செயலாக வாசித்த ஒரு விடயம் பற்றி உங்களுக்கு அறியத்தரலாம் என நினைக்கின்றேன். அதாவது இன்றைய வாழ்வில் முக்கிய அங்கமாக Smart Phones மாறிவிட்டது அதிலும் இந்த சட்டிங் அப்ஸ்(Chatting Apps)மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. அதனால் வட்ஸ்அப் (WhatsApp) பற்றி சில குறிப்புகள் இங்கே கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.
பெரும்பாலும் நீங்கள் அறிந்த விடயம்தான் இருந்தாலும் தெரியாத சில மக்களுக்காக சொல்லலாம் என நினைக்கின்றேன்.சாதாரணமாக நாம் MS Word பயன்படுத்தும் போது சில வேலைப்பாடுகளை எமது சொற்களுக்குக் கொடுப்போம் Bold, Italic, Strike through போன்றன சில உதாரணங்களாகும் அந்த வகையில் Whatsapp தற்பொழுது இந்த வசதியை தந்திருக்கின்றது நமக்காக அது நாம் மற்றவர்களுடன் சட் செய்யும் போது அவர்களுக்கும் நமக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களில் சில குறிப்பிட் மாற்றங்களை கொண்டு வரலாம்.
Bold: பெறுவதற்கு எழுத்துக்கு முன்னும் பின்னும்(*) பயன்படுத்தவும். *TamilComputer*
Italics: பெறுவதற்கு எழுத்துக்கு முன்னும் பின்னும்(_) பயன்படுத்தவும்._TamilComputer_
Strikethrough: பெறுவதற்கு எழுத்துக்கு முன்னும் பின்னும்(~) பயன்படுத்தவும் ~TamilComputer~
இனியென்ன செய்து பாருங்கள் Chat பண்ணி மகிழுங்கள்.
நன்றி மீண்டும் வருவேன் ,,,,,,,,,,,,,,,சந்திப்போம்..