Ads 468x60px

aaaaa



Back to top

Wednesday, July 11, 2012

எக்சலில் Conditional Formatting : தகவல்களை குறிப்பிட்ட நிபந்தனைப்படி தனித்துக்காட்ட..


MS Excel இல் அட்டவணையாக அமைந்த தகவல்களை வரிசை மற்றும் நெடுவரிசையாக வைத்து பயன்படுத்தலாம். இதில் ஒரு கோப்பை Spreadsheet என்பர். ஒரு கோப்பில் நிறைய எண்கள் மற்றும் சொற்கள் அடங்கிய தகவல்கள் இருக்கலாம். எதாவது ஒரு வரிசையில் அடங்கிய தகவல்களை அழகுபடுத்த Format சென்று வண்ணங்களை மாற்றுவோம்; எழுத்துகளின் அளவை பெரிதாக்குவோம்; பின்புறத்தில் உள்ள வண்ணத்தை மாற்றுவோம். ஆனால் ஒரு பக்கத்தில் உள்ள குறிப்பிட்ட செல்களை (Cell) மட்டும் வண்ணத்திலோ அல்லது வேறு வகையிலோ எப்படி வித்தியாசப்படுத்திக் காட்டுவது? இதற்கு உதவுவது தான் Conditional Formatting ஆகும்.

Conditional Formatting என்றால் என்ன?

குறிப்பிட்ட நிபந்தனையைக்கொடுத்து அதற்கு ஒத்துப்போகிற தகவல்களை மட்டும் அழகுபடுத்துவது தான் Conditional Formatting ஆகும். எடுத்துக்காட்டுக்கு பள்ளியின் மதிப்பெண் பட்டியலைக் கொள்வோம். இதில் கணக்கில் 100 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டும் பளிச்சென்று சிகப்பு வண்ணத்தில் தெரிய வேண்டும்.அதைப்போல மதிப்பெண் பட்டியலில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட வண்ணத்தில் தெரியவேண்டும். பார்த்தவுடனே கண்டுகொள்கிற மாதிரி இருக்க வேண்டும்.

Example for Conditional Formatting in Excel

A1 என்ற செல்லில் பெயரும் B1 என்ற செல்லில் சம்பளம் ருபாயிலும் இருப்பதாக
எடுத்துக்கொள்வோம்.நிபந்தனை : 15000 க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் மட்டும் பின்புறத்தில் பச்சை வண்ணத்திலும் அதற்கு கீழ் வாங்குபவர்கள் சிகப்பு நிறத்திலும் தெரிய வேண்டும்.

இப்போது தேவையான செல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமக்கு B2 என்ற
நெடுவரிசையில் மட்டும் சம்பளம் இருப்பதால் நாம் அந்த நெடுவரிசையில் தகவல்கள் உள்ள அத்தனை செல்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் எண்கள் அமைந்த செல்கள் அனைத்தையும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

Conditional Formatting in MS Excel
வேண்டிய பகுதியைத் தேர்வு செய்த பின் Format -> Conditional Formatting என்பதை
கிளிக் செய்யவும். இப்போது ஒரு விண்டோ திறக்கப்படும். அதில் முதல் கட்டத்தில் Cell value is என்று இருக்கும். இரண்டாவது கட்டத்தில் நமக்குத் தேவையான நிபந்தனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் greater than என்பதையும் மூன்றாவதில் 15000 என்பதையும் கொடுக்கவும். பின்னர் Format பொத்தானை அழுத்தினால் எந்த மாதிரி அழகுபடுத்தலாம் என்பதைச் செய்ய முடியும். இதில் மூன்று வகையான Formatting வசதிகள் உள்ளன.

Conditional Formatting in MS Excel

Fonts டேபில் எழுத்தின் அளவு, வண்ணம் போன்றவற்றை மாற்றலாம்.
Borders டேபின் மூலம் செல்களுக்கு பார்டர் கொடுக்கலாம்.
Patterns டேபின் மூலம் செல்களுக்கு பின்புற வண்ணத்தைக் கொடுக்கலாம். இதில் நாம் தேவையான சிகப்பு வண்ணத்தை தேர்ந்தெடுத்து Ok செய்யவும்.

Conditional Formatting in MS Excel
இப்போது நாம் குறிப்பிட்டிருந்த செல்களுக்குள் நிபந்தனை எங்கெங்கு பொருத்தமாகிறதோ அதெல்லாம் பின்புறத்தில் சிகப்பு நிறத்தில் மாறியிருக்கும். அடுத்து 15000 க்கு கீழே உள்ளவர்களுக்கு பச்சை நிறத்தில் மாற வேண்டும். மீண்டும் Format - > conditional formatting சென்று Add பட்டனை கிளிக் செய்து அடுத்த நிபந்தனையைக் கொடுக்கலாம். இப்போது நிபந்தனையில் less than கொடுத்து 15000 எனக்கொடுத்து தேவையான வண்ணத்தைத் தேர்வு செய்து விட்டால் முடிந்தது.

Conditional Formatting in MS Excel
Conditional Formatting in MS Excel
மொத்தம் மூன்று நிபந்தனைகள் வரை கொடுக்கலாம். இவை வேண்டாம் என்றால் தேவையான செல்களைத் தேர்வு செய்து Conditional formatting சென்று Delete கொடுத்து விடலாம். முதலிலேயே ஒரு worksheet முழுவதும் தேர்வு செய்து நிபந்தனைகளைக் கொடுத்து விட்டால் நீங்கள் அடிக்கும் தகவலுக்கேற்ப வண்ணங்களும் மாறிக்கொண்டே வரும்.


பயனுள்ள தகவல்கள்.. நன்றி! வாழ்த்துக்கள்..!

ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்ற மென்பொருள் BatchBlitz.


நமக்கு ஒரு படத்தின் அளவை மாற்ற வேண்டும் என்று கருதினால் அதன் அளவைக் குறைக்க அல்லது கூட்ட வேண்டும்.மேலும் அதன் மூலைகளின் அளவையும் (Dimension) குறைக்க அல்லது கூட்டச்செய்வோம். இதனால் படங்கள் அழகாக மாறும்.இதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.இந்த வசதி Paint லேயே உள்ளது.

ஆனால் ஒரே நேரத்தில் பல படங்களின் அளவை வேறு ஒரு அளவிற்கு மாற்றும்பணியை இந்த மென்பொருள் செய்கிறது.இந்த மென்பொருளில் படங்களை கையாள்வது எளிது மற்றும் உங்களிடம் படங்களை தேர்வு மட்டுமே செய்ய்ச்சொல்கிறது.
இது மட்டுமின்றி பல கோணங்களில் திருப்ப, வண்ணங்களை திருத்தவும், சொற்கள் சேர்க்கவும் உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருளாகும்.நன்றி!
தரவிறக்கச்சுட்டி : http://www.sunlitgreen.com/batchblitz.html

நன்றி என் இணைய நண்பரே 

கணினியின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் பற்றி அறிய GPU-Z மென்பொருள்

கணினியில் வீடியோ கார்டு தான் தெளிவான படம் மற்றும் காட்சிகளை பார்க்க உதவுகிறது. இதற்கு உங்கள் கணினியில் வீடியோ கார்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும். வீடியோ கார்டு என்றால் தெரியாதவர்களுக்கு GPU-Z என்ற இந்த மென்பொருள் உதவும். இது உங்களின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் ( Graphics Processing Unit ) பற்றி தெளிவான விவரங்களை அறிய உதவுகிறது.




NVIDIA , ATI போன்ற கார்ட்களையும் அறிகிறது.அடாப்டர், வீடியோ, கிராபிக்ஸ் பற்றி தகவல் தருகிறது.இதை நிறுவத்தேவையில்லை. எளிய மென்பொருள்.
துல்லியமான முடிவுகளை தருகிறது.

தரவிறக்க: Download GPU-Z

பார்ப்பம் பார்ப்பம்...........



கணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்



உங்கள் கணினியில் உள்ள Ram சரியாக உள்ளதா , ப்ரோசெசரின் அமைப்பு போன்றவை உங்களுக்கு புரியாத விசயமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் அனைத்து விவரங்களையும் ஒரு இலவச மென்பொருள் தருகிறது.






மேலும் கணினியில் இயங்கும் மென்பொருள்களின் விவரம், இயக்க நிலை சேவைகள், இயங்குதள தகவல், நெட்வொர்க் இணைப்புகள், பயாஸ், மின்கல சக்தி போன்ற அதிகளவு தகவல்களை தருகிறது.

இது அளவில் மிகசிறிய , பயன்படுத்த எளிமையான மென்பொருள் இலவசமாக தரப்படுகிறது. நன்றி!

முற்றுமுழுதாக சக்கையாக்கி தருகின்றது.


பயன்படுத்திப் பார்ப்பதற்கு தரவிறக்கசுட்டி: LookInMyPC

இனியென்ன ஒரு கை பார்த்திடவேண்டியதுதான் 

Saturday, July 7, 2012



IP எண்ணை வைத்து, கணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய.....!!
ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.
விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.
8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்

இனி என்ன யாருடைய ஜபி யையும் பாருங்கோ....மாட்டிக்காதிங்கோ

Popular Posts

Most Special Post

Blogger Widgets