Ads 468x60px

aaaaa



Back to top

Saturday, June 30, 2012

சைபர் யுத்தம்: பற்றி எரியும் Flame வைரஸ்





ஃப்ளேம் வைரஸ் (Flame Virus):

ஃப்ளேம் என்பது மிகவும் நுட்பமான, பெரும் ஆபத்தை விளைவிக்கும் தீம்பொருள் (Malware) ஆகும். இது பல நாடுகளில் உள்ள நிறுவனங்களை குறிப்பாக ஈரானை தாக்கி வரும் இணைய ஆயுதம் (Cyber Weapon) ஆகும். 20MB கொள்ளளவு கொண்ட இந்த வைரஸ் தான் இது வரை கண்டறியப்பட்டுள்ள வைரஸ்களிலேயே மிக பயங்கரமானது ஆகும்.

ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சிகூடத்தை தாக்கியுள்ள இந்த வைரஸ் சைபர் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் ரஷ்ய தொலைத்தொடர்பு அமைச்சர் இணைய ஆயுதங்களுக்கு தடை (Ban on Cyber weapons) விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அமெரிக்கா இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இணைய ஆயுத தடைக்கு சர்வதேச ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் என்ன செய்யும்?
Image Credit: Reuters
 கணினியில் உள்ள மைக்ரோபோன் மூலம் பேச்சுக்களை பதிவு செய்ய முடியும், தானாக ப்ளூடூத் தொழில்நுட்பத்தை ஆன் செய்ய முடியும், நமது கணினியில் உள்ளவற்றை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்ப முடியும், கணினியில் உள்ள கோப்புகளை திருட முடியும். இன்னும் பல செயல்களை இந்த வைரஸால் செய்ய முடியும்.



இதுவரை  உலகம் முழுவதிலும் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வரையிலான கணினிகள் இந்த வைரஸால் பாத்திக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், சூடான், சிரியா என மத்திய கிழக்கு நாடுகள் தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த வைரஸை முதன் முதலாக கண்டுபிடித்தது ஆன்டி-வைரஸ் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கி (Kaspersky) ஆகும். இந்த வைரஸ் ஆட்டோகேட் வரைபடங்களை (Autocad Drawings) திருடுவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த வைரஸ் கண்டிப்பாக ஒரு நாட்டின் உதவியுடன் தான் செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

தற்போது இந்த வைரஸ் போலி Microsoft security Updates-ஆக பரவி வருகிறது. இதை உண்மை என நினைத்து நமது கணினியில் நிறுவினால் ஃப்ளேம் வைரஸ் நமது கணினியையும் தாக்கும். இந்த வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது உண்மையான Windows Security Updates செய்துள்ளது.

Image Credit: CNET
இந்த உண்மையான Update எண்: KB2718704. உங்கள் கணினியில் Automatic windows Updates வைத்திருந்தால் தானாக அப்டேட் ஆகியிருக்கும். இல்லையெனில் Control Panel => Windows Update சென்று அதனை நிறுவிக்கொள்ளுங்கள்.







@@@@@@எப்படியெல்லாம் சண்டை பிடிக்கிறாங்கப்பா@@@@@@

0 comments:

Post a Comment

Popular Posts

Most Special Post

Blogger Widgets